8வது நாளிலும் சொல்லி அடிக்கும் கில்லி!.. கொச்சின் முதல் கோவை வரை.. விஜய் நண்பா, நண்பிகள் அலப்பறை!

By Sarath

Published:

தில், தூள் என விக்ரமை வைத்து பேக் டு பேக் ஹிட் கொடுத்த தரணி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படம் 20 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த வாரம் சனிக்கிழமை தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

8வது நாளிலும் கில்லி படத்துக்கு கூட்டம்:

20 வருடத்திற்கு முன்பாக கில்லி படத்துக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்ததோ அதே அளவுக்கு தற்போதும் வரவேற்பு உள்ளது. பொதுவாகவே ரீ ரிலீஸ் படங்கள் என்றால் முதல் நாள் முதல் காட்சி அல்லது முதல் நாள் ரசிகர்கள் கூட்டம் வைப் பண்ண வரும்.

ஆனால், கில்லி படத்தை பொருத்தவரையில் கடந்த எட்டு நாட்களாக சென்னையில் மட்டுமின்றி திரையிட்ட அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் கூட்டம் தியேட்டர்களில் அலைமோதி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

கமலா தியேட்டரில் பாடல் காட்சிகளில் சத்தத்தை குறைத்துவிட்டு ரசிகர்களை வைத்து கச்சேரி நடத்தி வருகின்றனர். கேரளாவின் கொச்சின் மற்றும் தமிழ்நாட்டின் கோவை மாவட்டங்களிலும் தளபதி ரசிகர்கள் கில்லி படத்துக்கு எட்டாவது நாளிலும் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர். அதன் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கில்லி படத்துக்கு இந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் கிரேஸ் இருப்பதை பார்த்த பலரும் கில்லி 2 படம் விரைவில் ரெடியாக வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து வருகின்றனர். மேலும் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படம் கில்லி அளவுக்கு இருக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சென்னையில் இந்த வாரம் கோர்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடிகர் விஜயுடன் நடிகை திரிஷா நடனமாடும் காட்சியும் படமாக்கப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி போடு பாடல் அளவுக்கு ஒரு பாடல் யுவன் சங்கர் ராஜா இசையில் ரசிகர்களுக்கு விருந்தாக அமையுமா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

மேலும், தெலுங்கில் வெளியான மகேஷ் பாபுவின் ஒக்கடு படத்தின் ரீமேக் தான் கில்லி என மகேஷ் பாபு ரசிகர்கள் கம்பு சுத்த அதெல்லாம் ஒரு படம், மகேஷ் பாபு நடிப்பு அந்த படத்தில் எப்படி இருக்குன்னு பாருங்க என ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு விஜய் ரசிகர்கள் கம்பேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

விஷாலின் புதிய படமான ரத்னம் படத்துக்கு வரும் கூட்டத்தை விட விஜய்யின் 20 வருட பழைய படத்துக்கு கூட்டம் அலைமோதி வருவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.