விஜயகுமார் வீட்டில் இன்னொரு டாக்டர்!.. ஹேப்பியான அனிதா.. யாருன்னு பாருங்க!..

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா குடும்பத்தில் அனைவரும் டாக்டராக இருக்கும் நிலையில் தற்போது அனிதாவின் மகன் ஸ்ரீஜெய்யும் டாக்டர் படிப்பை முடித்துள்ளார். மேலும் தன் மகனை பாராட்டி பதிவு ஒன்றை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார் அனிதா.…

sreejith

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா குடும்பத்தில் அனைவரும் டாக்டராக இருக்கும் நிலையில் தற்போது அனிதாவின் மகன் ஸ்ரீஜெய்யும் டாக்டர் படிப்பை முடித்துள்ளார். மேலும் தன் மகனை பாராட்டி பதிவு ஒன்றை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார் அனிதா.

மூத்த நடிகரான விஜயகுமார் மற்றும் முத்துகண்ணு தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் அருண் விஜய், கவிதா,அனிதா. இதில் கவிதா மற்றும் அனிதா இருவரும் டாக்டர் படிப்பை முடித்துள்ளனர். விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதா கோகுல் கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா மற்றும் ஸ்ரீஜெய் என இரண்டு குழந்தைகள். அனிதாவின் கணவர் கோகுல் கிருஷ்ணன் மற்றும் மகள் தியாவும் டாக்டர் தான். மேலும் அனிதாவின் மகன் ஸ்ரீஜெய்யும் டாக்டர் படிப்பை படித்துக் கொண்டிருந்தார்.

விஜயகுமார் வீட்டில் இன்னொரு டாக்டர்:

அருண் விஜய்க்கு பெண் எடுத்த குடும்பமும் ஒரு டாக்டர் குடும்பம். அருண் விஜயின் சில படங்களை அவரது மாமனார் தயாரித்துள்ளார். சமீபத்தில் அனிதாவின் மகள் தியாவிற்கு மகாபலிபுரத்தின் அருகே உள்ள பெரிய ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமணம் நடைப்பெற்றது. மெஹந்தி, பந்தக்கால், நலங்கு போன்ற பல நிகழ்சிகளுடன் ஒரு வாராமாக நடைபெற்ற விஜயகுமார் பேத்தியின் திருமணம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருந்தது. தியாவின் திருமணத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் தியாவின் கணவர் திலனும் ஒரு மருத்துவர். இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.

அதை தொடர்ந்து விஜயகுமார் நடிகை மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மொத்தம் மூன்று மகள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி. மூவரும் படங்களில் நடித்து பிரபலமானவர்கள். தன் தந்தையுடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக வனிதா தன் குடும்பத்தை விட்டு விலகி இருக்கிறார். மேலும் தன்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை என வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அனிதாவின் குடும்பத்தில் அனைவரும் டாக்டராக இருக்க தற்போது தன் மகனும் டாக்டர் ஆனதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் தன் மகனின் வீடியோவை ஷேர் செய்த அனிதா எங்க குட்டி இளவரசன் டாக்டர் ஆயிட்டார். அவரை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் , அவரின் கடின உழைப்புக்கு நன்றி என பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதை தொடர்ந்து ஸ்ரீஜெய்யின் அக்காவான தியாவும் எங்கள் வீட்டு புது டாக்டரை வரவேற்பதாக தன் தம்பியை பாராட்டியுள்ளார். மேலும் ஸ்ரீஜெய்யும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் மருத்துவ மாணவர் என இருந்த ப்ரொபைலை டாக்டர் என மாற்றியுள்ளார். விஜயகுமார் குடும்பத்தின் அடுத்த டாக்டரான ஸ்ரீஜெய்க்கு பலரும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.