நானும் என் கணவரும் பிரிந்தப் பின்பு விஜயகாந்த் அண்ணன் இதைச் செய்தார்… நளினி பகிர்வு…

By Meena

Published:

நளினி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்த நடிகை ஆவார். 80 களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ், மோகன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

1980 ஆம் ஆண்டு ‘ஒத்தையடி பாதையிலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நளினி. தொடர்ந்து ‘மனைவி சொல்லே மந்திரம்’, ‘கல்வடியும் பூக்கள்’, ‘நான் பாடும் பாடல்’, ‘நூறாவது நாள்’, ‘வேங்கையின் மைந்தன்’, ‘மண்ணுக்கேத்த பொண்ணு’, ‘அமுத கானம்’, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் நளினி.

நளினியை மேலும் பிரபலமாக்கியது என்னவென்றால் பல அம்மன் பக்திப் படங்களில் நடித்தது தான். ‘சமயபுரத்தாலே சாட்சி’, ‘நவகிரஹ நாயகி’, ‘மீண்டும் பராசக்தி’, ‘மேல்மருவத்தூர் அற்புதங்கள்’ போன்ற பக்தி திரைப்படங்களில் நடித்து பெண்கள் மனதில் இடம் பிடித்தார் நளினி.

2000 களின் ஆரம்பத்தில் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார் நளினி. பின்னர் சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்திய நளினி இன்று வரை நடித்துக் கொண்டு இருக்கிறார். 1987 ஆம் ஆண்டு நளினி 80 களில் உச்சத்தில் இருந்த கிராமத்து நாயகன் ராமராஜன் அவர்களை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அருண், அருணா என இரட்டை குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 2000 ஆம் ஆண்டு நளினியும் ராமராஜனும் பிரிந்து விட்டனர்.

இதைப் பற்றி நேர்காணலில் பகிர்ந்து கொண்டார் நளினி. அவர் கூறியது என்னவென்றால், நானும் என் கணவரும் பிரிந்தாலும் இன்று வரை அவர் மீது எனக்கு காதல் உள்ளது. நாங்கள் பிரிந்த நேரத்தில் பல பிரபலங்கள் என்னிடம் வருத்தத்துடன் பேசினர். அதில் முக்கியமானவர் விஜயகாந்த் அண்ணா தான். அவர் என் வீட்டுக்கே நேரில் வந்து கவலைபடாத மா, அண்ணன் இருக்கேன், உனக்கு என்ன வேணுமோ சொல்லு, அண்ணன் செஞ்சு தரேன் என்று சொன்னார் ஆறுதலாக பேசினார். அப்படி ஒரு நல்ல மனசுக்காரர் விஜயகாந்த் அண்ணா என்று பகிர்ந்துள்ளார் நளினி.