அதற்கு, அண்ணாமலை, “உங்கள் வயதில் இப்படி செய்யலாமா?” என்று கேட்க, பிரவுன் மணி “எல்லோரும் மன்னித்து விடுங்கள்” என்று கூறிவிட்டு, ரோகிணியிடம் சென்று, “எப்போதும் பொய் நிலைத்திருக்காது. இனிமேலாவது உண்மையாக இரு,” என்று கூறிவிட்டு செல்கிறார்.
இதற்குப் பிறகு, முதல் முறையாக அண்ணாமலை, ரோகிணியிடம் கோபப்படுகிறார். “எங்களை எல்லாம் முட்டாள் என்று நினைத்தாயா? எதற்காக இப்படி பொய் மேல் பொய் சொல்லி இருக்கிறாய்? உன்னை நாங்கள் எங்கள் மகள் போலத்தானே நினைத்தோம்! விஜயா உன்னை எப்படி நம்பி இருந்தாள்! எங்களுக்கெல்லாம் துரோகம் செய்து விட்டாயா?” என்று கடுமையாக வினவுகிறார்.
அப்போது, ரோகிணி அழுது கொண்டிருக்க, மீனா மற்றும் முத்துவும் மாறி மாறி, “ஏன் இப்படி செய்தாய்?” என்று கேட்கின்றனர். மனோஜ் மட்டும் வாயடைத்து இருக்கின்றார்.
இந்த நேரத்தில், ரோகிணி ஏதோ சொல்ல வர, உடனே விஜயா, “நிறுத்துடி திருட்டு கழுதை! உன்னை எல்லாம் என் மருமகள் என்று சொல்லவே அசிங்கமாக இருக்கிறது. என் பிள்ளையை ஏன் இப்படி ஏமாற்றினாய்? எங்கள் குடும்பத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாயே! உன்னை பற்றி வெளியில் நல்ல வார்த்தைகள் சொல்லியிருந்தேன். நான் கூட்டி வந்த மருமகள் என்று பெருமையாக சொல்லியிருந்தேன். ஆனால் என் தலையிலேயே நீ மிளகாய் அரைத்து விட்டாய்!” என்று கோபப்படுகிறார்.
ரோகிணி எதற்கும் பதில் சொல்லாமல் இருக்க, விஜயா அவளை கன்னத்திலும் முதுகிலும் சரமாரியாக அடிக்கிறார். ஒரு கட்டத்தில், “வீட்டை விட்டு வெளியே போ!” என்று கோபமாக கூறுவதுடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
நாளைய எபிசோடில், “மனோஜ், என்ன நம்பு, நான் உன்னை விட்டு எங்கும் செல்ல மாட்டேன், இந்த வீட்டை விட்டு போக மாட்டேன்’ என்று சொல்ல, விஜயா ரோகிணியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி கதவை சாத்துகிறார். இனி இந்த சீரியலில், அடுத்தடுத்து திடுக் திருப்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.