இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தான்… அவருக்காக தான் அந்தக் கதையை எழுதினேன்… மிஷ்கின் பகிர்வு…

By Meena

Published:

தொழில் ரீதியாக மிஷ்கின் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் சண்முகராஜா. தமிழ் சினிமாவில் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பிண்ணனி பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகங்களை கொண்டு பணியாற்றுபவர்.

பியோடர் தஸ்தாயேவெஸ்கியின் தி இடியட் நாவலின் நாயகனான இளவரசன் மிஷ்கினால் ஈர்க்கப்பட்டு தனது இயற்பெயரான சண்முகராஜா என்பதை மிஷ்கின் என்று மாற்றிக் கொண்டார். ஆரம்பத்தில் புத்தக கடையில் பணிபுரிந்த மிஷ்கின் அவர்களை இயக்குனர் கதிர் சினிமாவில் பணிபுரிய அழைத்துச் சென்றார்.

எட்டு மாதங்கள் இயக்குனர் கதிரிடம் பணிபுரிந்தார் மிஷ்கின். பின்னர் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்து ‘யூத்’ மற்றும் ‘ஜித்தன்’ ஆகிய வெற்றிப் படங்களில் பணியாற்றினார். பின்னர் தனியாக படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார் மிஷ்கின்.

2006 ஆம் ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மிஷ்கின். நரேன் மற்றும் பாவனா இப்படத்தில் நடித்திருந்தனர். அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இப்படம் ஆனது. தொடர்ந்து ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’,, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’, ‘பிசாசு -2’, ‘துப்பறிவாளன்- 2’ போன்ற படங்களை இயக்கியுள்ளார் மிஷ்கின்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட இயக்குனர் மிஷ்கின் தனது சினிமா அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியது என்னவென்றால், ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தான். அவருக்காக அவரை மனதில் வைத்து தான் அந்தக் கதையை எழுதினேன் என்று கூறியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.