தன்னுடைய போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப் மூலம் பரப்பி வருவதாக சீரியல் நடிகை கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
ஆனந்தம் சீரியல் மூலம், சின்னத்திரைக்கு அறிமுகமான லக்ஷ்மி வாசுதேவன் சரவணன் மீனாட்சி சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர். இதனையடுத்து ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் உள்ளிட்ட சீரியல்களில் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதில் தனது போட்டோக்களை ஆபாசமாக மார்ப்பிங் செய்து தனது வாட்ஸ் அப் தொடர்பில் உள்ள அனைவருக்கும் சிலர் அனுப்பி வருவதாக கண்ணீர் விட்டு கதறியுள்ளார். அந்த வீடியோவில், “இந்த செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி தனக்கு வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது அதில் உங்களுக்கு 5 லட்சம் லக்கி பிரைஸ் என்று போட்டிருந்தது. அது என்ன என்று பார்க்க அந்த லிங்கை கிளிக் செய்தேன். லிங்கை கிளிக் செய்ததும் புதிதாக ஒரு ஆப் டவுன்லோடு ஆகிவிட்டது. அதன் பின்னர் 3 நாட்கள் கழித்து நான் 5 ஆயிரம் கடன் வாங்கியிருப்பதாகவும்,அதை கட்ட வேண்டும் என்று மெசேஜ் வந்தது. நான் அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன்பிறகு வேறுவேறு நம்பரில் இருந்து தொடர்ந்து மிரட்டல் கால் மற்றும் மெசேஜ் வந்து கொண்டே இருந்தது.
இதனையடுத்து என்னுடைய போனை ஹேக் செய்து அதில் இருந்த போட்டோக்களை ஆபாசமாக மார்ப்பிங் செய்து ன்னுடைய நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் அனுப்பி இருக்காங்க என் பெற்றோருக்கும் என்னுடைய அசிங்கமான போட்டோ அனுப்பப்பட்டுள்ளது எனக்கூறும் போது கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். என்னுடன் நெருக்கிப் பழகியவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும்.
இதுதொடர்பாக நான் ஐதராபாத் சைபர் க்ரைம் போலீசாரிடமும் புகார் அளித்துள்ளேன். தயவு செய்து தப்பான ஆப்புக்குள் சென்று மாட்டிக்கொள்ளாதீர்கள். குறிப்பாக பெண்கள் ஆன்லைன் லோன் ஆப்களை தயவு செய்து நம்பி ஏமாற வேண்டாம் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
View this post on Instagram