ஜோதிகா சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கோயில் உண்டியல்களில் வீணாக காசு போடுவதைவிட மருத்துமனைகள் மற்றும் பள்ளிக் கூடங்களுக்கு செலவு செய்யுங்கள், அது மிக முக்கியமான ஒன்றாகும் என்று கூறி இருந்தார்.
இதனை இந்து மதவாதிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் சூர்யாவின் குடும்பத்தாரையும் இதுகுறித்து விமர்சித்து வந்தனர். ஆனால் ஜோதிகா குறித்த சர்ச்சைக்கு அவரது தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று சூர்யா ஜோதிகாவிற்கு ஆதரவு அளிக்கும் விதமாக, நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்து இருந்தார். அதாவது அந்த அறிக்கையில் ஜோதிகா எதையும் தவறாகக் கூறவில்லை. இதுபோன்ற கருத்துகளையே விவேகானந்தர், திருமூலம் போன்றோர் கூறியுள்ளனர்.
அவர்களது கருத்துகளைக் காது கொடுத்து கேட்காதோருக்கு சொல்வதற்கு ஏதுமில்லை, ஆனால் ஜோதிகா அவரது கருத்தில் இன்னும் உறுதியாகவே இருக்கிறார். அவர் நிச்சயம் பின்வாங்கப் போவதில்லை என்று கூறினார்
சூர்யாவின் அறிக்கைக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து விஜய் சேதுபதியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.