விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தன்னுடைய விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையினால் வளர்ந்தவர். ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து பீட்சா, தர்மதுரை, சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, விக்ரம் வேதா, ஆரஞ்சு மிட்டாய் போன்ற பல திரைப்படங்களில் வித்தியாசமான கெட்டப்புகளை தேர்ந்தெடுத்து வயசானவர் இளமை என எல்லா கதாபாத்திரங்களிலும் தனது அபாரமான நடிப்பை வெளிகாட்டி குறைந்த காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி.
நடிகராக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததன் மூலமும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்விஜய் சேதிபதி. விஜய்க்கு எதிராக மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் அவர் வில்லனாக நடித்தது பெரிதும் பாராட்டப்பட்டது. அதற்கு அடுத்ததாக சூரியுடன் இணைந்து விடுதலை திரைப்படத்தில் நடித்தார். எவ்ளோ பெரிய நடிகராக இருந்தாலும் மிகவும் யதார்த்தமாக இருப்பவர் விஜய் சேதுபதி. தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகராக இருந்துவரும் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.
அடுத்ததாக விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வருகிற ஜூலை 25ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் பெரிதாக எதுவும் போகவில்லை. அதற்கு காரணம் என்னவென்றால் இந்த திரைப்படத்தின் “என்னடி சித்திரமே” என்ற பாடல் வெளிவந்தவுடன் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. பலர் இந்த பாடலை ரிலீஸ் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள். அதனால் இந்த பிரமோஷனே போதும் மேற்கொண்டு நாம் பிரமோஷனில் அதிக செலவு செய்ய வேண்டாம் என்று இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி பிலிம்ஸ் முடிவு செய்து இருக்கின்றார்களாம். ஆனால் விஜய் சேதுபதி மட்டும் தனியாக சொந்த பணத்தை செலவு செய்து பிரமோஷன்களை நடத்தி இந்த படத்திற்கு நல்ல ரீச் கொடுக்க வேண்டும் என்று தன்னால் முயன்றவற்றை செய்து கொண்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
