அடிப்படையில் மருத்துவரான நடிகர் அஜ்மல் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். 2005 ஆம் ஆண்டு ‘பிப்ரவரி 14’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அஜ்மல் நடித்த மிக முக்கியமான திரைப்படங்கள் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘அஞ்சாதே’ மற்றும் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘கோ’ ஆகும். இவ்விரு திரைப்படங்களுக்காக ‘சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளைப் வென்றார்.
இது தவிர திரு திரு துறு துறு, மாற்றான், சித்திரம் பேசுதடி 2, தேவி 2, நுங்கம்பாக்கம், நெற்றிக்கண் போன்ற திரைப்படங்கள் இவர் நடித்ததில் குறிப்பிடத்தகுந்தது ஆகும். லண்டனில் எலும்பியல் துறையில் முதுகலை படிப்பதற்காக நடிப்பில் இருந்து சற்று இடைவேளை எடுத்துக் கொண்ட அஜ்மல் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
தற்போது மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் அஜ்மல் நடித்துள்ளார். ஒரு நேர்காணலில் விஜய் அவர்களுடன் நடிக்கும் போது கோட் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால், கோட் படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, விஜய் அவர்களிடம் நான் உங்களை எப்படி கூப்பிடுவது, அண்ணான்னு கூப்பிடவா இல்லை சார்ன்னு கூப்பிடவான்னு கேட்டேன். உடனே அவர் விஜய்னு கூப்பிடுங்க அப்படினு சொன்னார், அடுத்து உங்களை நான் எப்படி கூப்டினும்னு என்னை கேட்டார். ஒரு நிமிடம் நான் மெய்சிலிர்த்து விட்டேன். எவ்வளவு உயரத்தில் இருக்கும் மனிதர் இவ்வளவு எளிமையா இருக்கிறார், நிச்சயம் விஜய் அவர்கள் ஒரு மாமனிதர் தான் என்று பகிர்ந்துள்ளார் அஜ்மல்.