விஜயின் இன்றைய கவனம் தேர்தலா? ஜனநாயகனா?

நடிகர் விஜய் தனது கடைசி படமாக ஜனநாயகனில் நடித்துள்ளார். இந்தப் படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. பொங்கலையொட்டி படம் வெளியாவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக படத்திற்கு சென்சார் சர்டிபிகேட்…

நடிகர் விஜய் தனது கடைசி படமாக ஜனநாயகனில் நடித்துள்ளார். இந்தப் படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. பொங்கலையொட்டி படம் வெளியாவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் கிடைக்கவில்லை. அதனால் படத்தின் வெளியீடு தாமதமானது. இதற்கிடையில் நீதிமன்றத்தை நாடியபோதும் விஜயின் படத்துக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை. இன்னும் இது ஒரு தொடர்கதையாகி வருகிறது.

இதற்கு இடையில் படத்தில் அரசியல் டயலாக்குகள் அதிகமாக இருக்கும் என்று ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் உள்ளனர். விஜய் தற்போது அரசியலில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக 200 கோடி வரை சம்பளம் வாங்கிய விஜய் இப்போது அதை விட்டு விட்டு முழுக்க முழுக்க அரசியலில் இறங்கியுள்ளார். இந்த நேரத்தில் விஜயின் கவனம் எதில் உள்ளது?

ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதிலா? அல்லது அரசியலிலா என ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். விஜயின் கவனம் இப்போது உள்ள சூழலில் ஜனநாயகனில் அல்ல. அரசியலில் தான் அவரது தீவிர கவனம் உள்ளது என்று பதில் அளித்துள்ளார். அநேகமாக படம் தேர்தலுக்கு முன் வெளியானால் நிச்சயம் விஜய்க்கு அரசியலில் இது ஒரு பிளஸ் பாயிண்டாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.