#1MonthForVijayBdayBash என்ற ஹேஸ்டேக்கினை ட்ரெண்டாக்கும் விஜய் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் விஜய்க்கு தனி இடம் உண்டு, 32 ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்து நின்று வரும் விஜய்க்கு கோடிக்கணக்கிலான ரசிகர்கள் உள்ளனர். துவக்க காலத்தில் கலை வாரிசாக சினிமாவில் கால்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் விஜய்க்கு தனி இடம் உண்டு, 32 ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்து நின்று வரும் விஜய்க்கு கோடிக்கணக்கிலான ரசிகர்கள் உள்ளனர். துவக்க காலத்தில் கலை வாரிசாக சினிமாவில் கால் பதித்தாலும், அதன்பின்னர் அவரது கடுமையான உழைப்பால் இந்த அளவு உச்சநிலையினை அடைந்துள்ளார்.

ரசிகர்களால் செல்லமாக இளையதளபதி என்று அழைக்கப்பட்டுவந்த இவர் தற்போது தளபதி என அழைக்கப்படுகிறார். இவருக்கு இந்தியாவினைத் தாண்டி சீனா, ஜப்பான், அமெரிக்கா, வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர்.

அதேபோல் விஜய் படம் வெளியாகும்போது தமிழ்நாட்டில் இருக்கும் கொண்டாட்டம் போலவே கேரளாவிலும் இருக்கும். கடைசியாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை மாளவிகா மோகன் ஆகியோருடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த மாதம் 9 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், ஊரடங்கினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

5292cb5da31c3f00155dad1837643684-2

இத்திரைப்படம் எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஒருபுறம் காத்திருந்தநிலையில் தற்போது, விஜய் ரசிகர்கள் ஜூன் மாதம் வரவுள்ள பிறந்தநாளை இப்போதே கொண்டாடுகின்றனர். அதாவது, விஜய் ரசிகர்கள், ஜூன் 22 ஆம் தேதி #1MonthForVijayBdayBash என்ற ஹேஸ்டேக்கினை உருவாக்கி ட்விட்டரில் பெரிய அளவில் டிரெண்டிங்  செய்து வருகின்றனர்.

இந்த ஹேஷ்டேக் ஆனது பல மில்லியன் பார்வைகளையும், ட்வீட்டுகளையும் கொண்டு பிரபலமானதாக இருந்து வருகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன