தளபதியையே மிஞ்சிட்டீங்க… வேதிகாவைப் பாராட்டிய விஜய் ரசிகர்கள்!!

வேதிகா சினிமாவில் மதராசி என்னும் தமிழ்த் திரைப்படத்தின்மூலம் அறிமுகமானார் அறிமுகமானது என்னவோ தமிழில்தான் என்றாலும், தெலுங்கு மற்றும் மலையாளத்தில்தான் இவர் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். கன்னடத்தில் ஓரிரு படங்கள் எனத் தென்னிந்திய சினிமாவையே…

வேதிகா சினிமாவில் மதராசி என்னும் தமிழ்த் திரைப்படத்தின்மூலம் அறிமுகமானார் அறிமுகமானது என்னவோ தமிழில்தான் என்றாலும், தெலுங்கு மற்றும் மலையாளத்தில்தான் இவர் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். கன்னடத்தில் ஓரிரு படங்கள் எனத் தென்னிந்திய சினிமாவையே கலக்கிய வேதிகா, தி பாடி என்னும் படத்தின்மூலம் பாலிவுட் ஹீரோயினாகவும் ஆகினார்.

தற்போது தமிழில் வினோதன் மற்றும் ஜங்கிள் படங்களிலும், கன்னடாவில் ஹோம் மினிஸ்டர் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தெலுங்கில் கடைசியாக வெளியான ரூலர் செம ஹிட் ஆனது. அதேபோல் பாலிவுட்டிலும் இவர் எதிர்பார்க்காத அளவு தி பாடி படத்தின்மூலம் கிடைத்தது.

495aaf0cdb3390e43b8ba80722cc0c40

கொரோனா வைரஸ் தொற்றினைக் கட்டுக்குள் வைக்க தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்காத நிலையில், உலகின் பலநாடுகளிலும் ஊரடங்கே அமலில் உள்ளது.

அந்தவகையில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் இவர் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் வாத்தி கம்மிங்க் பாடல் மற்றும் குட்டி ஸ்டோரி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அந்த வீடியோவினை வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கினார். அது வைரலாகிப் போனதும் அம்மணி இதையே ஃபுல் டைம் வேலையாகச் செய்யத் துவங்கியுள்ளார்.

அதாவது வேதிகா ட்விட்டரில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு டிக் டாக் செய்து, அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த விஜய் ரசிகர்களோ, எங்க தளபதியையே மிஞ்சிட்டீங்க என்று பாராட்டியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன