தளபதி விஜய் வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினர் என்பது தெரிந்ததே
அதுமட்டுமன்றி மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்து அவரை சென்னைக்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் பல்வேறு பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர். அவைகளில் ஒரு ரசிகர் இதுகுறித்து நெகிழ்ச்சியாக கூறியதாவது: விசாரணை பற்றி எந்த அச்சமுமில்லை, தளபதி அவர்கள் நேர்மையானவர் நியாயமானவர், அண்ணன் கணக்கில் காட்டாத காட்ட இயலாத ஒரே சொத்து அவரது நண்பா நண்பிகளின் எண்ணிக்கை மட்டும் தான்!! தடைகளே தங்கமகனால் தகர்க்கப்பட வேண்டுமென்ற ஆசையில் வருகிறது! தளபதி வாழ்க!