எப்போதுமே சர்ச்சைக்குரிய வகையில் படம் இயக்குபவர் இயக்குனர் சாமி. சிந்து சமவெளி, உயிர், மிருகம் எல்லாமே சர்ச்சைக்குரிய படமாகும். இதில் மிருகம் மட்டும் கொஞ்சம் தப்பித்தது.
மற்ற இரண்டு படங்களும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. முறையற்ற உறவுகளை தன் படத்தில் காண்பித்ததற்காக இவர் மீது விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் சாமி விஜயை பற்றி கூறி இருக்கும் பதிவு விஜய் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. அஜீத் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அஜீத் ரசிகர்கள் இதை டிரெண்டாக்கி வருகின்றனர். அப்படி என்னதான் சொன்னார் சாமி.
விஜய் தனது ரசிகர்களிடம் கை கொடுத்த பிறகு கையை டெட்டால் ஊத்தி கழுவி விடுவார் என கூறி இருந்தார். பின்பு 50 கோடி சம்பளம் வாங்கி விட்டு நாட்டை மாற்றபோவதாக பேசுவதும், தவறு என்ற ரீதியில் பேசி இருந்தார்.
இதுதான் சமயமென காத்திருந்த அஜீத் ரசிகர்கள், அஜீத் விமான நிலையத்தில் ரசிகர்களிடம் பொறுமையாக செல்ஃபி எடுப்பதையும், விஜய் மூக்கில் துணியை கட்டிக்கொண்டு விமான நிலையம் செல்வதையும் இந்த விசயத்துடன் சேர்த்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.