100 தடவ சொல்லியும் கோட்டை விட்டுட்டீங்களே தலைவா.. விஜய் மீதே கோபத்தில் இருக்கும் ரசிகர்கள்.. தவெக தலைவரின் தவறான ரூட்..

தவெக தலைவர் விஜய்யை சுற்றி என்ன விமர்சனங்கள் வந்தாலும் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டே வருகின்றனர். சில நேரங்களில் விஜய் பக்கம் தப்பு இருந்தால் கூட அவர்கள் விஜய்க்கு…

vijay decision after jananayagan leak

வெ தலைவர் விஜய்யை சுற்றி என்ன விமர்சனங்கள் வந்தாலும் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டே வருகின்றனர். சில நேரங்களில் விஜய் பக்கம் தப்பு இருந்தால் கூட அவர்கள் விஜய்க்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தாமல் என்ன பிரச்சனை வந்தாலும் விஜய் பக்கம் நிற்பதை மாற்றிக் கொள்ள மாட்டோம் என்பதிலும் அவர்கள் உறுதியாக இருந்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு நடிகர் விஜய் சென்றாலும் அவரை காண லட்சக்கணக்கான மக்கள் கடல் போல பொது இடங்களில் கூடி ஆரவாரம் செய்வதுடன் நிச்சயம் விஜய்யை முதல்வர் இருக்கையில் அமர வைப்போம் என்றும் கங்கணம் கட்டி குறிப்பிட்டு வருகின்றனர். இப்படி விஜய்க்கு தொடர்ந்து ஆதரவு இருந்துவரும் அதே வேளையில் தான் தற்போது அவரது ரசிகர்களே விஜய்யை எதிர்க்கும் அளவுக்கான ஒரு சம்பவம் நடைபெற்று ரசிகர்கள் த்தியிலும் ஒரு சலசலப்பை உண்டு பண்ணியுள்ளது.

ஜனநாயகன் லீக் சர்ச்சை..

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அரசியல் பயணத்தை மேற்கொண்டு வரும் விஜய், முதல் முறையாக வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கு மத்தியில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் திரைப்படம் தான் தனது கடைசி திரைப்படம் என்றும் விஜய் குறிப்பிட்டு இருந்தார். அப்படி இருக்கையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் ஜனநாயகன் திரைப்படம் லீக்காகி மிகப்பெரிய ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

விஜய்யின் தீவிர ரசிகர்கள் இது திமுக உள்ளிட்ட விஜய்க்கு எதிரானவர்கள் செய்த சதி என்றும் இன்னொரு பக்கம் விஜய்யே வேண்டும் என்று இந்த படத்தை லீக் செய்து திரையரங்கில் தேர்தலுக்கு முன்பாக வெளியிட வேண்டும் என்ற திட்டத்தில் செய்திருக்கலாம் என்றும் பல்வேறு விதமான கருத்துக்கள் இருந்து வருகிறது. ஒரு திரைப்படம் முழுவதும் இப்படி ஆன்லைனில் லீக்கானது நிச்சயம் அந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்புதான்.

விஜய் எடுத்த முடிவு..

இந்த இழப்பை நடிகர் விஜய் சரி செய்வார் என்று ஒரு தகவல் பரவி வரும் அதே வேளையில் தான் விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ழ்த்திய ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் ஜனநாயகன் தான் தனது கடைசி திரைப்படம் என குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தற்போது அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் இழப்பை ஈடு கட்டுவதற்காக கடைசியாக இன்னும் ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
vijay in politics

மக்களுக்கு நல்லது செய்வதற்காக தனது கரியரின் உச்சத்தை விட்டு அரசியல் வருவதாக நூறு முறை குறிப்பிட்ட விஜய் மீண்டும் சினிமா பக்கம் திரும்புவார் என்பதாக தகவல்கள் வெளியாது, அரசியலில் அவரது நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பும் விதமாக அமைந்துள்ளது. இதனால் பலரும் குறிப்பிடுவது போல அவர் ஒரு நடிகர் தான் என்றும் அரசியலுக்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார் என்றும் அவரது ரசிகர்களே புலம்பத் தொடங்கியுள்ளனர்.