விஜய்யும் சூர்யாவும் நேருக்கு நேர், ப்ரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். தலைப்பை படித்ததும் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள் என எண்ண வேண்டாம்.
வரும் ஏப்ரல் 14 அன்று தமிழ்ப்புத்தாண்டு வருகிறது அதற்காக விஜய் நடித்த மாஸ்டர் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
வரும் ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டுக்கு 5 நாட்கள் முன்னதாகவே விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதாவது ஏப்ரல் 9ம் தேதியே இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறதாம்.
இதே போல் சூர்யா நடிப்பில் சூரரை போற்று திரைப்படத்தை ஏப்ரல் 9, ஏப்ரல் 14 அல்லது மார்ச் 1 ஆகிய மூன்று தேதிகளில், ஒரு தேதியை தேர்வு செய்து படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நல்ல கதையம்சம் உள்ள திரைப்படம் என்பதால் மக்கள் வரவேற்பார்கள் அதனால் படக்குழு எப்ரல் 9ல் சூரரை போற்று படத்தை வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் விஜய் படமும் சூர்யா படமும் மோதுவது உறுதியாகியுள்ளது.