விஜய் நடித்த பிரண்ட்ஸ், காவலன் பட இயக்குனர் கவலைக்கிடம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

நடிகர் விஜய் சூர்யா வடிவேலு, ரமேஷ் கண்ணா, தேவயானி மற்றும் பல நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் பிரண்ட்ஸ். இந்த திரைப்படம் தற்பொழுது வரைக்கும் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் காமெடி காட்சிகளை யாராலும் மறக்க முடியாது.

குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ள வடிவேலு அவருடைய நேசமணி என்னும் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம் அடைந்தது. சமூக வலைத்தளங்களில் அவ்வபோது டிரெண்டிங்கிலும் நேசமணி காமெடி வசனங்கள் வலம் வருவது வழக்கம் தான்.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சித்திக் இப்போது கவலக்கிடமான ஒரு நிலைமையில் ஹாஸ்பிடல் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்னும் ஒரு தகவல் வெளியாகி பலரையும் கவலையடைய செய்துள்ளது.

இது குறித்து பல பிரபலங்கள் தங்களுடைய சோசியல் மீடியாவில் ஆறுதல்களை தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் சித்திக் சீக்கிரமாகவே குணமாய்ந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மலையாள திரை உலகின் முன்னணி இயக்குனரக வலம் வரும் சித்திக் இவருக்கு கிட்டத்தட்ட 69 வயது ஆகிறது. இவர் இதுவரைக்கும் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை டைரக்ட் செய்துள்ளார்.

தமிழில் விஜய் நடித்துள்ள பிரண்ட்ஸ் மற்றும் காவலன் என்னும் வெற்றி படங்களை இயக்கியுள்ளார். விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தையும் இவர் தான் டைரக்ட் செய்துள்ளார். மேலும் இவருடைய படங்கள் எதார்த்தமான கதைகளை கொண்டு இருக்கும் என்பதால் மலையாள திரை உலகத்தில் இவர் படங்களுக்கு தனி ரசிகர்கள் வட்டாரமே உருவாகியுள்ளது.

நடிகர் அர்ஜுனிடம் சில்க் ஸ்மிதா கேட்ட அந்த ஒரு கேள்வி! கடைசியில் என்ன நடந்தது?

இந்த நிலைமையில் தான் இயக்குனர் சித்திக் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளது என்ற செய்தி வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இயக்குனர் சித்திக் அவர்கள் நிமோனியா, கல்லீரல் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் லைவ் சப்போர்ட் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சித்திக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.