விஜய் நடிக்க வந்து 27 வருசம் ஆச்சு- வாழ்த்து மழையில் விஜய்

இன்று இருக்கும் சினிமா நடிகர்களில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் வந்தாலே சினிமாவில் விசில் பறக்கும்.வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் நடிகர்களில் விஜய்யும் முக்கியமானவர். அசைக்க முடியாத இமயத்தின்…

இன்று இருக்கும் சினிமா நடிகர்களில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் வந்தாலே சினிமாவில் விசில் பறக்கும்.வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் நடிகர்களில் விஜய்யும் முக்கியமானவர். அசைக்க முடியாத இமயத்தின் உச்சியில் இருப்பவர் நடிகர் விஜய்.

23a99b1920860df685547623c2452eb1

இவர் நடிக்க வந்து 27 வருடங்கள் ஆகி விட்டதாம் எப்படி பார்த்தாலும் விஜய் நடிக்க வந்து 27 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது எனதான் கூற வேண்டும். இவர் சிறுவயதில் இவர் தந்தையார் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வந்த பல படங்களில் இவர்தான் ஹீரோக்களீன் சிறு வயது வேடத்தை ஏற்றவர். ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தில் எல்லாருமே திருடங்கதான் என்ற பாட்டில் கூட விஜய் சிறுவயதில் நடித்திருப்பார்.

இருப்பினும் விஜய் நடித்து 1992ல் இவர் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வந்த நாளைய தீர்ப்பு படமே அதிகாரப்பூர்வமாக இவர் நடிக்க வந்த முதல் படம்.

தொடர்ந்து சங்கவியுடன் ஜோடி சேர்ந்து ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்பிள்ளை, ஸ்வாதியுடன் தேவா, வசந்த வாசல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்து இந்த படங்கள் வெற்றியும் பெற்றது.

கமர்சியல் ப்ளஸ் க்ளாமர் கலந்த படங்களில் நடித்து கொண்டிருந்த விஜய்க்கு பூவே உனக்காகவும் அதற்கு அடுத்து வந்த காதலுக்கு மரியாதையும் மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.

200 நாட்களுக்கு மேல் இவ்விரு படங்களும் அடுத்தடுத்து ஓடி விஜய்க்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.

இதன் பின் விஜய் நடித்த படமெல்லாம் ஹிட்தான் கில்லி, மதுர , திருப்பாச்சி, வேட்டைக்காரன் என பலவிதமான ஆக்சன் படங்களில் நடித்து தற்போது பிகில் வரை முன்னணி நடிகராக விஜய் 27 வருடங்களாக தமிழ்த்திரைவானில் ஜொலிக்கிறார்.

நேற்றுடன் அவர் நடிக்க வந்து 27 வருடங்களாவது குறிப்பிடத்தக்கது.

இதை ஒட்டி பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

https://twitter.com/Vinoari3/status/1202220416913117189?s=20

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன