விக்னேஷ் சிவன் படத்துக்கு பூஜை போட்டாச்சு!.. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடி யார் தெரியுமா?

By Sarath

Published:

நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவன் தவறவிட்ட நிலையில், அடுத்து அவர் யாருடன் இணைந்து படம் பண்ணுவார் என்கிற கேள்வி தமிழ் சினிமாவில் தலைதூக்கியது.

உடனடியாக விக்னேஷ் சிவனுக்கு கை கொடுத்தது லவ் டுடே படத்தின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தான். ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து பல மாதங்கள் ஆகியும் இன்னமும் படத்தை ஆரம்பிக்க வில்லையே ஏன் என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், லியோ படத்தை தயாரித்த லலித் குமார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனின் படத்தின் பூஜை என்று போடப்பட்டு அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

GBUMAHBagAAHYdU

விக்னேஷ் சிவன் பட பூஜை:

கடந்த ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சுமார் 65 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டி இருந்தது. அதன் பின்னர் நடிகர் அஜித்தின் 62-வது படமான ஏகே 62 என்று அழைக்கப்பட்ட படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு வந்தது. ஆனால் விக்னேஷ் சிவன் செய்த சிறிய தவறால் அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் தற்போது விடாமுயற்சி எனும் பெயரில் மகிழ்திருமேனி அந்த படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர் அஜித் மற்றும் லைக்கா நிறுவனம் இயக்குனர் விக்னேஷ் சிவனை கைவிட்ட நிலையில், விஜயின் லியோ படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது விக்னேஷ் சிவன் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது.

GBUMAG8aIAASJLW

பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்த கீர்த்தி ஷெட்டி:

இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக டோலிவுட் நடிகை கீர்த்தி ஷெட்டி கமிட் ஆகியுள்ளார். தமிழில் வாரியர் மற்றும் கஸ்டடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் அடுத்ததாக ஜெயம் ரவியுடன் ஜீனி என்னும் படத்திலும் நடத்தி வருகிறார். இயக்கத்தில் சூர்யாவுடன் இவர் நடித்து வந்த வணங்கான் திரைப்படம் பாதியிலேயே டிராப் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதிக்கும் மகளாக தெலுங்கில் வெளியான உப் பென்னா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி. நானி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஷியாம் சிங்க ராய் படத்திலும் இவர் ஹீரோயினாக நடித்திருந்தார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா தமிழில் அறிமுகமான கஸ்டடி திரைப்படமும் தமிழில் இவருக்கு வெற்றி படமாக அமையவில்லை. எப்படியாவது கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என போராடி வரும் கீர்த்தி ஷெட்டி அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க உள்ள இந்தப் படத்துக்கு எல்ஐசி என வித்தியாசமாக விக்னேஷ் சிவன் டைட்டில் வைத்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.