வெற்றிமாறன் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள விடுதலை 2 திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. எல்ரெட் குமாரி தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த வருடம் வெளியான விடுதலை 1 திரைப்படம் எப்படி சூரிக்கு திருப்புமுனையாக அமைந்ததோ இந்த ஆண்டில் இன்று விடுதலை 2 வெளியாகி உள்ளது. இந்த முறை சூரிக்குப் பதில் ஸ்கோர் செய்பவர் விஜய் சேதுபதி. புரட்சிகரமான பெருமாள் வாத்தியாரை சூரி பிடித்ததிலிருந்து விடுதலை 2 தொடங்குகிறது.
படம் முழுக்க வெற்றி மாறனின் வசனங்கள் புரட்சியை கிளர்கிறது. ஏற்கனவே படம் 2 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு மேல் இருந்த நிலையில் தற்போது 8 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் படம் முழுக்க சற்றும் தொய்வில்லாமல் சுவாரஸ்யமாகச் செல்கிறது என டிவிட்டரில் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். விஜய் சேதுபதி மகாராஜா படத்தின் மூலம் தன்னை ஒரு கைதேர்ந்த ஹீரோவாக நிலைநிறுத்திய நிலையில் வெற்றிமாறன் விஜய்சேதுபதியைச் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களான சூரி, மஞ்சுவாரியர், அனுராக் காஷ்யப், ராஜீவ் மேனன், கென் கருணாஸ், சேத்தன், பவானி ஸ்ரீ ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
வெற்றிமாறனின் கருத்தியல் எப்போதும் தோற்றதில்லை. விஜய் சேதுபதியின் நடிப்பு அற்புதம். சூரி குறைந்த காட்சிகளே வருகிறார். முதல் 30 நிமிடங்கள் படம் பரபரப்பாக இருக்கிறது. கென் கருணாஸ் மற்றும் ராஜீவ் மேனன் காட்சிகள் அற்புதம். மொத்தத்தில் சிறந்த படம் என ஒருவர் விமர்சனம் எழுதியிருக்கிறார்.
வெற்றிமாறன் அசுரன் படம் போல் இப்படத்தினை செதுக்கியிருக்கிறார். இளையராஜாவின் பின்னனி இசை படத்திற்குப் பெரிதும் பலம் என்றும், குடும்பத்துடன் அமர்ந்து பார்ப்பதற்கு எற்ற படமல்ல என்றும் மற்றொரு ரசிகர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறனின் கல்ட் திரைப்படம் இது. வெற்றிமாறனுக்கு தேசிய விருது நிச்சயம்.
விடுதலை 2-ல் வெற்றிமாறனின் எழுத்தே பலம். திரைக்கதையும், வசனங்களுமே படத்தினைத் தாங்குகிறது. இடைவேளை மற்றும் காட்சிகள் சரியாக உள்ளது. சில காட்சிகள் மட்டும் போரடிப்பதாகக் கூறயிருக்கிறார்.
மேலும் பலர் படத்தினைப் பார்த்து தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.