மஞ்சு வாரியர் வெளியிட்ட வீடியோ… வாழ்த்துகளைச் சொன்ன கீர்த்தி சுரேஷ்…!!

மஞ்சு வாரியர் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர், தமிழ்நாட்டினைச் சார்ந்தவராக இருந்தாலும், இவர் மலையாள சினிமாவிலேயே முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் 1995 ஆம் ஆண்டு தனது சினிமா வாழ்க்கையினைத் துவக்கினார்.…

மஞ்சு வாரியர் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர், தமிழ்நாட்டினைச் சார்ந்தவராக இருந்தாலும், இவர் மலையாள சினிமாவிலேயே முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் 1995 ஆம் ஆண்டு தனது சினிமா வாழ்க்கையினைத் துவக்கினார். இவர் சாட்சியம் என்ற மலையாளத் திரைப்படத்தின்மூலம் அறிமுக நடிகையாகி அறிமுகமாகி, தற்போது 25 ஆண்டுகளைத் தாண்டி சினிமாவில் நிலைத்து நடித்து வருகின்றார்.

7c54359072ae1541eb56fa569d64db27

இவர் மலையாள நடிகர் திலீப்பை 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார், பின்னர் 2014 ஆம் ஆண்டு மணமுறிவு ஆனதும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இவருக்கு பெரிய வரவேற்பு கொடுத்தனர் மலையாள ரசிகர்கள்.

கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்து இருப்பார். தமிழில் அறிமுகப் படத்திலேயே அம்மணி போதும் போதும் என்று சொல்கிற அளவு ஸ்கோர் பண்ணி இருப்பார்.

கொரோனா ஊரடங்கால் ஓய்வில் இருந்துவரும் மஞ்சு வாரியர், வீணை வாசிக்கக் கற்றுள்ளார். வீணையை வாசிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட, இவருக்கு நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் எனப் பலரும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை கீர்த்தி சுரேஷ், “வாவ், சேச்சி அற்புதம்” என்று வாழ்த்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன