இயக்குனர் சேரன் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கொழிஞ்சிப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதில் இருந்தே நாடகங்களில் நடிப்பவர் சேரன். இவர் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார்.
சிறு வயதிலிருந்தே நாடகத்தில் நடித்ததால் நடிப்பின் மீதும் சினிமாவின் மீதும் ஆர்வம் கொண்டு திரையுலகில் சாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தார் இயக்குனர் சேரன். ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் தயாரிப்பு உதவி மேலாளராக பணிபுரிந்தார் சேரன்.
பின்னர் கே. எஸ். ரவிக்குமாருக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார் சேரன். கே. எஸ். ரவிக்குமாரின் ‘புரியாத புதிர்’, ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ போன்ற திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார் சேரன். அடுத்ததாக கமல்ஹாசனுடன் இணைந்து ‘மகாநதி’ திரைப்படத்தில் பணிபுரிந்தார்.
1997 ஆம் ஆண்டு பார்த்திபன் மற்றும் மீனா நடித்த ‘பாரதி கண்ணம்மா’ படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1999 ஆம் ஆண்டு ‘பொற்காலம்’, 2000 ஆம் ஆண்டு ‘வெற்றி கொடி கட்டு’ ஆகிய திரைப்படங்களை இயக்கினார். வெற்றி கொடி கட்டு படம் மாபெரும் வெற்றிப் பெற்று அனைவரின் பாராட்டைப் பெற்றார் சேரன்.
இயக்கம் மட்டுமல்லாது நடிப்பிலும் இறங்கினார் சேரன். 2002 ஆம் ஆண்டு தங்கர் பச்சான் அவர்களின் ‘சொல்ல மறந்த கதை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‘ஆட்டோகிராப்’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘யுத்தம் செய்’ போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சேரன்.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட சேரன் நடிகர் முரளியை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், நான் தேசிய கீதம் படம் எடுத்ததற்கு பிறகு படம் பண்ணலாமா வேணாமா அப்படினு குழப்பத்தில இருந்தேன். அந்த நேரத்தில முரளி சார் என்னை கூப்பிட்டு நாம் படம் பண்ணலாம் அப்படினு சொன்னார். அப்படி உருவானது தான் வெற்றிக் கொடி கட்டு திரைப்படம். ஒரே மாதத்தில் கதை ரெடி பண்ணின வெற்றிக் கொடி கட்டு படம் நல்ல ஹிட்டாகி எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. உண்மையிலேயே முரளி சார் மிகவும் நல்ல மனிதர் என்று கூறியுள்ளார் இயக்குனர் சேரன்.