ஜெயிலர் படத்தின் பாடல் வெளியாகும் முன்பே பாராட்டி தள்ளிய விஜய்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாக இருக்கிற நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்பொழுது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் சிங்கிள் பாடலின் புரோமோ சமீபத்தில் வெளியானது. அதில் வழக்கம் போல நெல்சன் வெளியிடும் புரோமோ வீடியோவில் காமெடிக் காட்சிகள் இருப்பது போல ஜெயிலர் புரோமோ வீடியோவிலும் நெல்சனின் காமெடிக் காட்சிகள் இடம்பெற்று கலக்கி உள்ளது .

பொதுவாக நெல்சன், அனிருத் கூட்டணியில் ஒரு பாடல் வெளியாகும் முன்பாக அந்த பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவது வழக்கம். எதார்த்தமாகவும், கலகலப்பாக இருக்கும் இந்த புரோமோவை பார்ப்பதற்கும் தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

அருண் ராஜா காமராஜ் எழுதி, அனிருத் இசையமைக்கும் காவாலா பாடல் தமன்னாவிற்க்காக உருவாக்கப்பட்டது என்பது இந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக இருந்து வரும் இசையமைப்பாளர் அனிருத் தென்னிந்திய சினிமாவை கலக்கி வருகிறார். சமீபத்தில் லியோ படத்தின் முதல் சிங்கிள் பாடலான நா ரெடி தான் பாடல் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து வெளியாகும் காவாலா பாடல் – நா ரெடி பாடலுடன் போட்டி போடும் அளவுக்கு இருக்குமா என காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனால் காவாலா பாடல் புரோமோ வெளியான சில மணிநேரத்தில் சமூக வலைத்தளங்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இரட்டை வேடத்தில் கலக்க வரும் அஜித்! தல மாஸ் அப்டேட் இதோ!

இந்நிலையில் காவாலா பாடலை கேட்ட விஜய் அவர்கள் அனிருத்தை பாராட்டியுள்ளாராம். மேலும் அனிருத்துடன் நெருக்கமான நட்புடன் விஜய் அவர்கள் இருந்து வருவதால் அனிருத் உருவாகும் பாடல்களை விஜய்க்கு போட்டு காட்டுவது வழக்கம்.

மேலும் ஜெயிலர் படத்தை நெல்சன் தான் இயக்கி வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த பாடலுக்காக ரஜினி ரசிகர்கள் ஆவலாக இருந்து வருகின்றனர்.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...