வாழையை வம்புக்கு இழுத்த பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா.. இப்படி ஒரு விமர்சனமா?

By John A

Published:

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான வாழை திரைப்படம் பல்வேறு விமர்சனங்களைத் தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது. தன் மாணவப் பருவ வாழ்க்கையில் பட்ட வேதனைகளை அடிப்படையாக வைத்து இயக்குநர் மாரி செல்வராஜ் இப்படத்தினை இயக்கியிருந்தார்.

வாழை திரைப்படத்தினை தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநர்களும், சினிமா விமர்சகர்களும் புகழ்ந்து தள்ளினர். மேலும் சிலர் கிளைமேக்ஸ் பார்த்து கண்களில் கண்ணீருடன் மாரி செல்வராஜை ஆரத் தழுவினர். படத்தில் முக்கியமாகப் பேசப்பட்டது கிளைமேக்ஸ் காட்சி தான்.

ஒருகனம் மனதை உலுக்கும் இந்தக் காட்சிக்கு கண்ணீர் விடாதவர்கள் எவரும் கிடையாது. சமீபத்தில் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வெளியான போது கூட மாரி செல்வராஜ் வாழை படம் ஹவுஸ்ஃபுல் ஆகியிருந்ததை ஸ்கீரீன் ஷாட் எடுத்துப் பகிர்ந்திருந்தார்.

இப்படி வாழை திரைப்படம் பல்வேறு வகைகளிலும் பாராட்டு மழையில் நனைந்த வேளையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா வாழை திரைப்படம் பற்றி சற்று காட்டமான விமர்சனத்தினை முன்வைத்திருக்கிறார்.

ஒரே பாட்டில் நான்கு ஹீரோக்களுக்கு பின்னனி பாடிய டி.எம்.எஸ்.. எவர்கிரீன் சூப்பர் ஹிட் பாடல் உருவான விதம்!

வாழை படத்தில் சிவனைந்தன் மற்றும் ஆசிரியர் பூங்கொடியின் உறவு குறித்து, “தாய்லாந்திலும் மற்ற செக்ஸ் டூரிஸ தேசங்களிலும் லைவ் ஷோ என்ற பிரபலமான காட்சி உண்டு. ஒரு பெரிய அறையின் நடுவே வட்ட வடிவத்தில் ஒரு மேடை இருக்கும்.

அதில் கண்ணைக் கூசும் வெளிச்சத்தில் ஓர் ஆணும், பெண்ஷம் உடலில் எந்த ஆடைகளுமின்றி உடலுறவு கொள்வார்கள். அறையைச் சுற்றி அமர்ந்திருக்கும் ஆண்களும் பெண்களும் அந்தக் காட்சியைக் கண்டு களிப்பார்கள்.

இதுபோலாத் தான் வாழை திரைப்படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி மாணவன் சிவனைந்தன் காட்சிகள் அனைத்தும் தாய்லாந்தின் லைவ் ஷோ காட்சிகளின் Soft Version ஆகவே எடுக்கப்பட்டிருக்கின்றன. அங்கே நேரடியாக நடக்கும். இங்கே மறைமுகமாக நடக்கிறது.” என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் சாரு நிவேதிதா.

தற்போது இவரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.