தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்தின் அப்டேட்கள் தினந்தோறும் வெளிவந்து விஜய் ரசிகர்களை குஷியாக்கி வருகிறது அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள ஒரு அப்டேட் குறித்த தகவல் குறித்து பார்ப்போம்
மாஸ்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ’வாத்தி இஸ் கம்மிங்’ என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே விஜய் பாடிய ஒரு குட்டி கதை பாடல் உலக அளவில் பிரபலமான நிலையில் இந்த பாடலையும் பிரபலமாக்க விஜய் ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது