பிரபல ஹிந்தி நடிகை வாணி கபூர் இவர் தமிழில் சில வருடங்கள் முன் வெளிவந்த ஆஹா கல்யாணம் என்ற தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார்.
ஹிந்தியில் பல படங்களில் இவர் நடித்துள்ளார் . சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் நடிகைகளில் இவரும் இப்போது இணைந்துள்ளார்.
ஹிந்து மதத்தின் முக்கிய கடவுளான ராமரை கவர்ச்சி உடையில் தெரியுமாறு இவர் அணிந்து அதை டுவிட்டரிலும் வெளியிட்டு இருந்தார். இது பலருக்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அப்படம் நீக்கப்பட்டது.
இந்நிலையில் ஹிந்துக்கள் மனதை இவர் புண்படுத்தியதாக கூறி இவர் மீது மும்பை போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்துள்ளவர் பெயர் ராமா சாவந்த். இவர் மும்பை ஜோஷிமார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீஸார் வாணி கபூர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.