வாணி போஜன் ஒரு மாடலாக தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார். விளம்பரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா சீரியல் மூலம் அறிமுகம் ஆனார்.
துவக்கத்தில் பெரிய அளவில் பிரபலமாக விட்டாலும், சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டு இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமாகினார். இளைஞர்கள் இவரை சின்னத்திரை நயன்தாரா என்றே செல்லமாக அழைத்து வருகின்றனர்.
இவர் சன் தொலைக்காட்சியில் சன் குடும்ப விருதுகள் வழங்கும் விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதினை 3 முறை பெற்றுள்ளார்.

சின்னத்திரையில் கலக்கிய வாணி தெலுங்கி 2019 ஆம் ஆண்டில், மீக்கு மாத்ரமே செப்தா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்தப் படம் பெரிய அளவில் ஹிட் ஆனதைத் தொடர்ந்து தமிழிலும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன.
இவர் அவ்வப்போது போட்டோஷுட் நடத்துவது வழக்கம், அந்த போட்டோக்கள் இளைஞர்கள் மத்தியில் எப்போதும் வைரலாவதுண்டு.
அந்தவகையில் இவர் ஊரடங்கு காலத்தில் பல வகையான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஷ்லீவ்லெஸ்ஸில் இருப்பதுபோன்ற ஒரு புடவையில் போட்டோஷுட் நடத்தி இளைஞர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. ஒரே படத்தில் நடித்தாலும் பெரிய அளவில் பேமசாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
