வணங்கான் இசை வெளியீட்டு விழா.. அதோட இன்னொரு முக்கியமான சிறப்பும் இருக்கு.. என்னான்னு தெரியுமா?
அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 18-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இயக்குநர் பாலா கடைசியாக கடந்த 2018-ல் நாச்சியார் என்ற படத்தினை இயக்கியிருந்தார். ஜோதிகா, ஜி.வி..பிரகாஷ், இவானா ஆகியோர் நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் பாலா படங்களுக்கென தனி ரசிகர்களின் வரவேற்பினைப் பெற்றது. இதனையடுத்து சூர்யா நடிப்பில் வணங்கான் படத்தினை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சில நாட்கள் ஷுட்டிங் நடைபெற்றது. அதன்பிறகு கொரோனா ஊரடங்கால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது. இதனையடுத்து லாக் டவுன் முடிந்தவுடன் மீண்டும் ஷுட்டிங் தொடங்கப்பட்டது.
அதன்பின், இயக்குநர் பாலாவிற்கும், சூர்யாவிற்கும் கருத்துவேறுபாடுகள் காரணமாக இப்படத்திலிருந்து சூர்யா விலகினார். இயக்குநர் பாலா சூர்யாவிற்குப் பதிலாக அருண் விஜய்யை அடுத்து நடிக்க வைத்தார். தற்போது இப்படத்தின் ஷுட்டிங் அனைத்தும் முடிந்து அண்மையில் டீசர் வெளியிடப்பட்டது. இதில் அருண் விஜய் வேறொரு பரிணாமத்தில் நடித்திருக்கிறார். இதுவரை ஆக்சன் படங்களில் நடித்த அருண் விஜய் இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
90‘s கிட்ஸ் இளைஞர்களை வசியம் செய்த குரல்.. மாயக்குரலோன் ரஞ்சித் பாடிய பாடல்களா இது?
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 18-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த விழாவுடன் இயக்குநர் பாலா திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகளை நிறைவு செய்ததன் விழாவினையும் சேர்த்து கொண்டாட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்து சேது படத்தின் மூலம் கடந்த 1999-ல் இயக்குநராக அடியெடுத்து வைத்த பாலா இதுவரை 8 படங்களை இயக்கியிருக்கிறார். வணங்கான் பாலாவின் 9-வது படமாகும். நான் கடவுள் படத்திற்காக 2008-ம் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதினைப் பாலா பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வணங்கான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.