தல அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து அஜித் ரசிகர்கள் டுவிட்டுக்கள் செய்தது இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது
இதுகுறித்த ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் இந்திய அளவில் டிரெண்ட் ஆக்கி உள்ளனர். இந்த நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பில் சிக்கல் என வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் பொய்யானவை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தில் நடிக்கும் நாயகி, வில்லன் உள்பட மற்ற நட்சத்திரங்களை அறிவிப்பு வெளிவரும் என்றும் அதனை அடுத்த சில நாட்களில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்