நயன்தாரா தனுசுக்கு இடையே இருக்கும் மோதல் தான் இன்று வலைத்தளம் முழுவதும் பேச்சு பொருளாக ஆகிவிட்டது. நயன்தாரா தனுஷின் மீதான பல குற்றச்சாட்டுகளை வைத்து வெளியிட்ட அறிக்கை தான் அதற்கு காரணம். நயன்தாரா விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் தற்போது தான் இவர்களது திருமண டாகுமென்டரி Netflixசில் வெளியாக இருக்கிறது.
தனுஷ் தயாரிப்பில் உருவான நானும் ரவுடி தான் என்ற படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். இந்த படப்பிடிப்பு தளத்தில் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் இந்த படம் மிகவும் ஸ்பெஷல் என்றும் இந்த படத்தின் காட்சிகள் மற்றும் பாடலை பயன்படுத்த என்ஓசி சர்டிபிகேட்டை தனுஷிடம் கேட்டு கடந்த இரண்டு வருடமாக போராடிக் கொண்டிருந்தோம். ஆனால் தனுஷ் தன் மீது உள்ள வெறுப்பினால் தரவில்லை என்று நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார்.
தற்போது இதை எதிர்த்து வலைப்பேச்சு சேனலில் வலைப்பேச்சு அந்தணன் பிஸ்மி சக்திவேல் ஆகிய மூவரும் தனுஷ் மீது எந்த தவறும் இல்லை என்று கூறி இருக்கின்றனர். அவர்கள் கூறியது என்னவென்றால் தனுஷின் என்ஓசி சர்டிபிகேட் பெறுவதற்கு லீகலாக எந்த முயற்சியும் செல்லாமல் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா illegalகளாக பல சதி வேலைகளை செய்திருக்கின்றனர். தனுஷ் விக்னேஷ் இருவருக்கும் பொதுவான நண்பரான ஸ்ரேயாஸ் இடம் தனுஷின் கவனத்திற்கு எடுத்து செல்லாமலேயே என் ஓ சி சர்டிபிகேட் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
அதையும் தாண்டி ஸ்ரேயாஸ் தனுஷின் கவனத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார். அதற்குப் பிறகு நயன்தாராவும் விக்னேஷ்வும் தனுஷுக்கு பல இடத்திலிருந்து மிரட்டல்களையும் அழுத்தத்தையும் என்ஓசி சர்டிபிகேட் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். இது தனுஷிற்கு மிகவும் கோபத்தை வரவழைத்து இருக்கிறது.
இந்த கோபம் காரணமாக என்னால் என் ஓ சி சர்டிபிகேட் தர முடியாது. உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் என்று முடிவெடுத்து விட்டார். அதனால் தான் இந்த பிரச்சனை என்றும் தனுஷ் மீது எந்த தவறும் இல்லை என்று தங்களது வலைப்பேச்சு சேனலில் அவர்கள் கூறி இருக்கின்றனர். இது இந்த பிரச்சனையின் முழு கண்ணோட்டத்தை வேறு திசைக்கு மாற்றி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இனி போக போக இந்த பிரச்சனை எந்த நிலைக்கு செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.