அதிகாலை 2 மணிக்கு வைரமுத்துவுக்கு போன் செய்து பாட்டு கேட்ட ஏ.ஆர். ரஹ்மான்.. பூனையின் ஒலியை சூப்பர் ஹிட் பாட்டாக்கிய நிகழ்வு

By John A

Published:

இந்திய சினிமாவின் இசைப்புயலாக விளங்கும் ஏ.ஆர். ரஹ்மான் ஆட்டம் ராயன் படத்திலும் தனது முத்திரையைப் பதித்து உசுரே நீதானே என சுழன்றி அடித்துக் கொண்டிருக்கிறார். பெரும்பாலும் நள்ளிரவு தாண்டி அதிகாலையில் இசைப்பணிகளைச் செய்யும் வழக்கம் கொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படி நள்ளிரவு நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாட்டில் ஒரு சந்தேகம் எழ வைரமுத்துவுக்குப் போன் செய்து வரிகளை வாங்கி அதை சூப்பர் ஹிட் பாடலாகக் கொடுத்திருக்கிறார்.

அந்தப் பாடல் தான் என அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற யாரோ.. யாரோடி பாடல். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் கதாநாயகனாகவும், பேபி ஷாலினி கதாநாயகியாக அறிமுகமான படம். அலைபாயுதே படம் இன்றும் காதலர்களுக்கு விஷேசமான படம். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.

அப்படி நள்ளிரவு நேரத்தில் உருவான ஒரு பாடல் தான் யாரோ.. யாரோடி பாடல்.. இந்தப் பாடலைப் பாடகிகள் பாடும் போது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திருப்தி ஏற்படவில்லை. எனவே சற்று வேறுவிதமாக யோசித்திருக்கிறார். உடனே பூனையின் குரலான மியாவ் சப்தம் நினைவுக்கு வரவே இதேபோல் பாடலை பாடுமாறு பாடகிகளுக்கு அறிவுறுத்த யாயாரோ..யாரோடி பாடலைப் பாடியிருக்கிறார்கள்.

நடிக்காமல் ஒதுங்கிய இருபெரும் சூப்பர் ஸ்டார்கள்.. வசனகார்த்தா கண்ணதாசன் கவியரசராக உருவாகிய வரலாறு..

மேலும் கவிஞர் வைரமுத்து முதலில் பல்லவிக்கு ஒரே வரிகளை எழுதிக் கொடுத்திருக்கிறார். அது சரியாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மெட்டு அமைய வில்லை. எனவே நள்ளிரவு 2 மணிக்கு வைரமுத்துவுக்குப் போன் செய்து இந்தப் பாடலுக்கு இரண்டாம் அடி வேறு எழுதிக் கொடுங்கள் என்று கேட்க, தூக்கக் கலக்கத்தில் வைரமுத்து யாரோ.. யாரோடி உன் திமிருருக்கு அரசன் என எழுதிக் கொடுக்க பாடல் சிறப்பாக அமைந்தது.

யாரோ.. யாரோடி உன்னோட புருஷன்
யாரோ.. யாரோடி உன் திமிருக்கு அரசன்..

என திருமண பந்தத்தின் உன்னதத்தை உணர்த்தும் பாடலாக உருவாகியது.