நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான காதல் பாடல்களை எழுதிய வைரமுத்து அவர்கள் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் காதலர்தின கவிதை ஒன்றை எழுதியுள்ளார்
அந்த கவிதை இதோ:
காதலும் பசியும்
காணாது போயின்
பூதலம் மீது
புதுப்பித்தல் ஏது?
வெற்றியில் தோல்வியாய்
தோல்வியில் வெற்றியாய்ப்
பற்றிடும் காதலே
பற்றுக பற்றுக!
இந்த கவிதையை தற்போது காதலர்கள் மற்றும் இளைஞர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் இன்று காதலர் தின கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த கவிதையை அவர் எழுதியிருப்பது பொருத்தமானதாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்