வைகைப்புயல் வடிவேலு நடித்த படங்களில் காமெடியை மட்டும் பார்த்தால் போதும். நாம் வாய்விட்டுச் சிரித்து விடுவோம். வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும். அப்படின்னா வடிவேலு நமக்கு எப்படி எப்படி எல்லாம் ஒரு மருத்துவரைப் போல மறைமுகமாக உதவுகிறார் என்று எண்ணிப் பாருங்கள். அப்பேர்ப்பட்ட வடிவேலுவின் அல்டிமேட் காமெடி தான் இப்பவே கண்ண கட்டுதே. இது எப்படி உருவானதுன்னு பார்க்கலாமா…
இயக்குனர் ஏ வெங்கடேஷ் காமெடிக்கு மட்டும் ஒருமுறை அல்ல, இரண்டு மூன்று முறை, அந்த காமெடி சரியாக வர வேண்டும் என்று இயாக்குவாராம்.
ஏனென்றால் காமெடி என்பது படத்திற்கு மிக முக்கியமானது. காமெடி சரியாக எடுக்கவில்லை என்றால் யாரும் சிரிக்க மாட்டார்கள் அதனால் காமெடியை மிக சரியாக எடுக்க வேண்டுமென இரண்டு மூன்று முறை எடுப்பாராம் வெங்கடேஷ.
சரத்குமார் நடித்த ‘ஏய்’ திரைப்படத்தில் வடிவேல் இப்பவே கண்ண கட்டுதே என பல காட்சியில் சொல்வார் , அந்த காமெடிக்கு முன்பு வடிவேலை வைத்து சில காமெடிகளை அப்படத்திற்காக எடுத்திருக்கிறார் ஒருமுறை அல்ல 2 முறை அல்ல நான்கு முறை 5 முறை எடுத்திருக்கிறார் அதை பார்த்துவிட்டு வடிவேலு இப்பவே கண்ண கட்டுதே என்று சொல்லி இருக்கிறார்.
அண்ணே இந்த மாதிரி இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் அதனால் இந்த மாதிரி ஒரு கேட்சிங்கான ஒரு விஷயத்தை தான் எதிர்பார்த்தேன்னு சொல்லி இந்த இது படம் முழுக்க எல்லா காமெடியிலும் பேசுங்கள் என்று சொல்லி அந்த இப்பவே கண்ண கட்டுதே என்ற வசனத்தை வைத்தாராம் அது மிகப் பிரபலமானது என இயக்குனர் வெங்கடேஷ் சொல்லியிருக்கிறார். இந்த காமெடியை நான் எதிர்பார்த்தே செய்தேன் என அவர் கூறியிருக்கிறார்.