இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது 46 ஆயிரத்து 433 ஆக உள்ள நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்டமாக மே 4 ஆம் தேதியில் இருந்து மே 18 வரையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கால் ஏழை, எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசாங்கத்தின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு பணம் மற்றும் பொருளதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி சினிமாப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் அவரவர் பங்கிற்கு உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில், “பசி என்ற ஒரு நோய் இருக்கு… அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்… ஓ மை கடவுளே!!! என்று பதிவிட்டுள்ளார். வழக்கம்போல் ரசிகர்கள் இவரது பதிவினை வைரலாக்கி உள்ளனர்.