நடிகர் சந்தானம் காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் அவர் மூன்று படங்களில் ஹீரோவாக தற்போது நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று டகால்டி. முதல் முறையாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் சந்தானம் நடித்து வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் என்பவர் நடித்தி வருகிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நாளை மாலை 5 மணிக்கு இன்னொரு பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டது. சந்தானம் படத்திற்காக இரண்டு இசையமைப்பாளர்கள் ஒரு பாடலை பாடி உள்ளது கோலிவுட் திரையுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது