தீபாவளி படங்கள், பொங்கல் படங்கள் எல்லாம் முன்பு ஒரு காலத்தில் அந்த நாளில் மட்டுமே வெளியாகும். முன்பே வெளியாவது என்பது குறைவுதான்.
ஆனால் சில வருடங்களாக இந்த படங்கள் இரண்டு நாளுக்கு முன்பே வெளியாகிறது. சில படங்கள் நான்கு நாட்கள் முன்பே வெளியாகிறது.
பண்டிகை நாட்களில் வெளியாவது சிறப்புதான் அதனால் கடும் நெருக்கடிகளை பலர் சந்திக்க கூடும்.
அளவுக்கதிகமான ரசிகர்கள் கூடுவதால் போலீஸ் இவர்களை கண்ட்ரோல் செய்வதில் இருந்து ரசிகர்கள் வந்து செல்லும் வாகனங்கள் வரை அனைத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
தீபாவளியன்று பல காவலர்கள் பணியில் இருந்தாலும் கொஞ்சம் பணியில் அட்ஜட்ஸ்ட் செய்து தீபாவளி கொண்டாடவே விரும்புவார்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்துங்கள் என தியேட்டர் நிர்வாகம் சார்பில் சொன்னாலும் லோக்கல் போலீஸ் ஸ்டேசனில் குறைந்த அளவு காவல்துறையினரே வருவார்கள். நெரிசலை சமாளிக்க முடியாது.
இது போல தீபாவளியன்று ரசிகர்களை தவிர சாதாரண ரசிகர்கள் யாரும் படம் பார்க்க வரவேண்டும் என நினைப்பது கடினம். ஏனென்றால் குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்கள் அதிக அளவில் திரள்வார்கள் அவர்களை மீறி படம் பார்ப்பது என்பது கடினம். இரண்டு நாட்களுக்கு முன்பே படத்தை வெளியிட்டு விட்டால், போலீஸ், நெரிசல், வாகன நெரிசல், புதிய திரைப்படங்களால் ரசிகர்களிடம் ஏற்படும் திடீர் சண்டைகள் போன்றவை தீபாவளிக்கு முன்பே கட்டுப்படுத்தப்படும். தீபாவளியன்று அமைதியாக எல்லாம் அமையும்.
இது போக படம் வெளியிடும்போது கடைசி நேர சிக்கல் என்று ஒன்று வரும் படம் ரிலீஸ் ஆவதில் கூட திடீர் சிக்கல் ஏற்படும். முன்பே ரிலீஸ் தேதி அறிவித்து விட்டால் சொன்ன தேதியில் வராவிட்டாலும் அந்த பிரச்சினையை அட்ஜட்ஜ் செய்து தீபாவளியன்றாவது படத்தை ரிலீஸ் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.