த வெ க கட்சியின் கொள்கை தலைவர்களுள் ஒருவரான அஞ்சலை அம்மாள்… விஜயின் பேச்சை கேட்டு கோரிக்கை வைத்த அஞ்சலை அம்மாளின் பேரன்…

By Meena

Published:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் விஜய். அவருக்காக பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் படம் எடுப்பதற்காக வரிசையில் நின்ற போதும் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் விஜய். மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று விரும்பி அரசியலில் களமிறங்க போவதாகவும் கூறினார்.

அதன்படி தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை அறிவித்து பின்பு சிறிது நாட்களில் கட்சி கொடியையும் பாடலையும் வெளியிட்டார். அதற்கடுத்ததாக மாநாடு நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி நேற்றைய முன்தினம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விஜயின் பேச்சை கேட்க இலட்சக்கணக்கானோர் விக்கிரவாண்டியில் கூடினர். கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் விஜய்க்காக கூடினர். விக்ரவதி சாலையே 20 கிலோமீட்டர் தொலைவிற்கு ஸ்தம்பித்து போனது என்றே கூறலாம். அந்த அளவுக்கு தொண்டர்கள் தங்களது ஆதரவை விஜய்க்கு தெரிவித்தனர். மாநாடு நிகழ்ச்சியை கொடியேற்றி தொடங்கி வைத்த விஜய் முதலில் கட்சியின் கொள்கை தலைவர்களைப் பற்றி பேசினார்.

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களாக நடிகர் விஜய் குறிப்பிட்டது பெருந்தலைவர் காமராஜர், அம்பேத்கார், பெரியார், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள். இதில் அஞ்சலை அம்மாள் சுதந்திர போராட்டத்தில் பெரிதும் பங்களித்து சிறை சென்றவர். தற்போது இந்த அஞ்சலை அம்மாள் அவர்களின் பேரன் விஜயன் பேச்சை கேட்டு மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.

அஞ்சலை அம்மாள் அவர்களின் பேரன் கூறியது என்னவென்றால் விஜய் அவர்களின் பேச்சை கேட்கும் போது எனக்கு மெய்சிலித்து விட்டது. நான் சிறு வயதில் இருக்கும் போது எனது பாட்டி அஞ்சலை அம்மாளின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. தற்போது அது இல்லை. மீண்டும் எனது பாட்டி அஞ்சலை அம்மாளின் வாழ்க்கை வரலாறை பாட புத்தகத்தில் கொண்டுவர வேண்டும் என்று கூறி தாழ்மையுடன் கோரிக்கை வைத்திருக்கிறார் அஞ்சலை அம்மாள் அவர்களின் பேரன்.