வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்தில் த்ரிஷா ஒரு பாடலுக்கு மட்டும் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி விஜயின் கடைசி இரண்டு படங்களில் ஒன்றான தி கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். விஜய் அரசியலில் இணைந்து தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கியுள்ள நிலையில் மக்களுக்கு முழு ஈடுப்பாட்டுடன் சேவையை செய்ய வேண்டும் என்பதால் சினிமாவில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.
விஜய்யுடன் மீண்டும் த்ரிஷா:
மேலும், அவரது கடைசி படத்தை ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பதால் விஜய் அப்படத்தை தரமாக கொடுக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளார். இந்நிலையில் தளபதி 69 படத்தை இயக்க வெற்றிமாறன், எச்.வினோத், அட்லி, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்களின் பெயர்கள் தொடர்ந்து அடிப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் யார் தளபதி 69 படத்தை இயக்க உள்ளார் என்பது ஆதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.
மேலும் வழக்கம் போல் விஜயின் பெரும்பாலான படத்திற்கு விஜய் தனது குரலில் ஒரு பாடல் பாடி இருப்பார், அதே போல் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள தி கோட் படத்திலும் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார் என தெரிவித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந்த நிலையில் விஜய் பாடிய பாடல் மே மாதம் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள நிலையில் தற்போது த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் மூலமே தெரிய வந்தது. இந்நிலையில், ஹீரோவும் வில்லனும் இந்த படத்தில் விஜய் தான் எனக் கூறுகின்றனர். இரண்டு விஜய்யின் மிரட்டலான நடிப்பை காண ரசிகர்கள் காத்திருப்பது வொர்த் தான் என பிரேம்ஜியும் சமீபத்தில் பேசியிருந்தார்.
கடைசியாக விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் கில்லி படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா ”அப்படி போடு” பாடலுக்கு ஆடிய ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது தற்போது தி கோட் படத்திலும் விஜயுடன் ஒரு பாடலுக்கு மட்டும் த்ரிஷா ஆடியிருப்பது ரசிகர்களுக்கு அந்த படத்தின் மீதுள்ள ஏதிர்ப்பார்ப்பை தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.