த்ரிஷா நடிப்பில் திருஞானம் இயக்கத்தில் உருவாகிய ’பரமபதம் விளையாட்டு’ என்ற அரசியல் த்ரில்லர் திரைப்படம் நாளை வெளியாக இருந்தது. அதற்கான புரமோஷன் பணிகள் கடந்த இரண்டு வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது
இந்த படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் த்ரிஷா பங்கேற்பதால் சர்ச்சை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பரமபத விளையாட்டு திரைப்படம் திடீரென நாளை வெளியாகவில்லை என்றும் இதற்காக த்ரிஷா ரசிகர்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
இந்த படம் திடீரென ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக த்ரிஷா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்