படத்துல ஒண்ணுமே இல்ல.. இந்தியன் 2 பற்றி பிரசாந்த் என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு?

கமல் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் இன்று வெளியானது . ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்தோடு சென்று படத்தை பார்த்து வருகிறார்கள். இந்தியன் படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம் இந்தியன் 2 படத்தின் மீது…

prashanth and kamalhaasan

கமல் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் இன்று வெளியானது . ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்தோடு சென்று படத்தை பார்த்து வருகிறார்கள். இந்தியன் படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம் இந்தியன் 2 படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகளவு உருவாக்கி இருந்தது. கமல் ஷங்கர் கூட்டணியில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

ஆனால் அனிருத் இசையில் அமைந்த பாடல்கள் ரசிகர்களை எதிர்பார்த்த அளவு திருப்தி படுத்தவில்லை. இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் ஏ ஆர் ரகுமானின் இசை பெரிய அளவில் ஸ்கோர் செய்திருந்தது. அதை எதிர்பார்த்து ரசிகர்கள் இந்தியன் 2 படத்தையும் பார்க்க செல்ல அங்கு அவருடைய இசை ஏமாற்றத்தை தந்தது.

இருந்தாலும் கமலின் நடிப்பு மற்ற நடிகர்கள் நடிப்பு என ஓரளவு ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் படத்தை பார்க்க திரையுலகை சார்ந்த பல பிரபலங்கள் இன்று திரையரங்கிற்கு சென்றனர். அதில் டாப் ஸ்டார் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜனும் படத்தை பார்க்க சென்றிருந்தனர் .

படத்தை பார்த்துவிட்டு தியாகராஜனும் பிரசாந்தும் அவரவர் கருத்துக்களை தெரிவித்தனர் .அதில் பிரசாந்த் இந்தியன் 2 படத்தை பற்றி கூறியிருந்தது இதுதான் .படத்தின் முதல் பாதியில் ஒன்றுமே இல்லை. பிரம்மாண்டம் மட்டுமே இருந்தன .பிரம்மாண்டம் பிரம்மாண்டம் பிரம்மாண்டம். இது மட்டுமே முதல் பாதியில் இருந்தன.

இரண்டாம் பாதியில் எமோஷன் காட்சிகள் அதிகளவு இருந்தன. சங்கர் சார் எப்போதும் போல இந்த படத்தில் தூள் கிளப்பி விட்டார். கமல் சார் சொல்லவே வேண்டாம். நடிப்பில் பட்டையை கிளப்பிட்டார். இவ்வாறு பிரசாந்த் கூறினார்.

அதேபோல் அவருடைய தந்தை தியாகராஜனும் இந்தியன் 2 படத்தில் அமைந்த எமோஷன் காட்சிகளை பற்றி மட்டுமே கூறியிருந்தார். அதில் சில காட்சிகள் என்னை அழ வைத்துவிட்டன. அந்த அளவு எமோஷன் சீன்கள் படத்தில் அதிக அளவு இருந்ததாக தியாகராஜன் கூறினார்.