20 வயதிற்கு முன்பாகவே படத்தில் ஹீரோவாக மாஸ் காட்டிய முன்னணி 5 டாப் ஹீரோக்கள்

By Velmurugan

Published:

சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை அனைவர் மனதிலும் இருக்கும். ஆனால் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக மாறி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. மேலும் அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதும் அல்ல. தமிழ் சினிமாவில் தற்போது பல முன்னணி ஹீரோக்கள் இருந்து வருகின்றனர்.

திறமையாக நடிக்கும் பல துணை நடிகர்களுக்கு ஹீரோவாகும் வாய்ப்பு பல படங்களுக்கு பின்பே அமைகிறது. ஆனால் சில ஹீரோக்கள் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமாகி அதன் பின் மாஸ் ஹீரோவாக மாறியுள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் 20 வயதிற்கு முன்னதாக ஹீரோவாக உருவெடுத்த மாஸ் ஹீரோக்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அந்த வகையில் நாம் முதலில் பார்க்கும் ஹீரோ புரட்சித்தலைவர் எம்ஜிஆர். தனது 19ஆம் வயதில் எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் 1936 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவர் தனது சிறந்த நடிப்பின் வாயிலாக ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இந்த திரைப்படம் எதிர்பார்க்காத அளவுக்கு வசூலை மிகவும் அள்ளி குவித்தது.

அடுத்த ஹீரோ தனுஷ். தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி கதாநாயகர்களிள் தனுசும் ஒருவர். இவர் 19 வயதிலேயே அவரின் சகோதரர் செல்வராகவன் இயக்கிய தந்தை கஸ்தூரிராஜா தயாரிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது மெலிந்த தோற்றத்தால் பல கேலிகளுக்கு ஆளான தனுஷ் தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாக தற்போது தனது 50 படமான ராயன் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இவரின் திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக நாம் பார்க்கும் ஹீரோ சிம்பு. எஸ் டி ஆர் என அழைக்கப்படும் சிலம்பரசன் தனது 19 வயதிலேயே அவரது தந்தை டி ராஜேந்திரன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படத்திற்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் சிம்பு ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன்பாகவே குழந்தை நட்சத்திரமாக டி ராஜேந்திரன் இயக்கும் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மாநாடு படத்தின் மூலம் மாசான ரிஎன்ட்ரி கொடுத்திருக்கும் சிம்பு அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்தும் வருகிறார்.

லியோ திரைப்படம் முழுக்க முழுக்க ரீமேக் படமா? உண்மையை உடைத்த பிரபலம்!

நான்காவதாக நாம் பார்க்கும் ஹீரோ பிரசாந்த். 1990களில் ரசிகர்கள் இடையே மிகப் பிரபலமான ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் தனது 17 வயதிலேயே கதாநாயகனாக நடித்துள்ளார். ராதா பாரதி இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் நடித்தார். இவரின் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

ஐந்தாவதாக நாம் பார்க்கும் ஹீரோ விஜய். தளபதி விஜய் கதாநாயகனாக நடிப்பதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் வெற்றி படத்தில் நடித்திருக்கிறார். பிறகு இவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் சோபா சந்திரசேகர் தயாரிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படம் வசூலை அள்ளி குவிக்க தனது சிறந்த நடிப்பின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் திரைப்படத்திலேயே சிறந்த அறிமுக நடிகர் விருது பெற்றார் நடிகர் விஜய்.