நம் மன பாரம் குறைய வேண்டுமானால் வாய் விட்டுச் சிரிக்க வேண்டும். வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். இந்த நிலை நமக்கு எப்போதும் கிடைத்தால் என்றும் இளமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கலாம்.
அந்த வகையில் 80ஸ் குட்;டீஸ்கள் ரொம்பவே லக்கி தான். அந்தக் காலகட்டத்தில் தான் நிறைய காமெடி படங்கள் அதுவும் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் ரசிகர்களுக்கு விருந்து படைத்தன. அந்த வகையில் தமிழ்த்திரை உலகில் பட்டையைக் கிளப்பிய 10 காமெடி படங்கள் பற்றிப் பார்ப்போமா…
தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படம் 2013ல் வெளியானது. இந்தப்படத்தில் சித்தார்த், சந்தானம், ஹன்சிகா, கணேஷ் வெங்கட்ராம், ஆர்.ஜே.பாலாஜி, வித்யுலேகா ராமன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை இயக்கியவர் சுந்தர்.சி.
அதே ஆண்டில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய காமெடி படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். சூரி, பிந்து மாதவி, ஸ்ரீரஞ்சனி, ஷாலு ஷம்மு உள்பட பலர் நடித்துள்ளனர். பொன்ராம் இயக்கியுள்ளார்.
2009ல் வெளியான படம் சிவா மனசுல சக்தி. ஜீவா, அனுயா பகவத், சந்தானம், ஊர்வசி, ஆர்யா உள்பட பலர் நடித்துள்ளனர். மு.ராசேசு இயக்கியுள்ளார்.
2006ல் வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி. வடிவேலு, நாகேஷ், நாசர், மனோரமா, தேஜாஸ்ரீ, ஸ்ரீமன் உள்பட பலர் நடித்துள்ளனர். சிம்புதேவன் இயக்கியுள்ளார்.
1998ல் வெளியான படம் காதலா காதலா. இந்தப்படத்தில் கமல், பிரபுதேவா இருவரும் இணைந்து காமெடியில் கலக்கியுள்ளனர். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியுள்ளார்.
1996ல் வெளியான அவ்வை சண்முகி படத்தில் கமல், மீனா, ஜெமினிகணேசன், ஹீரா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். உள்ளத்தை அள்ளித்தா படத்தை இயக்கியவர் சுந்தர்.சி. கார்த்தி, ரம்பா, கவுண்டமணி, மணிவண்ணன், ஜெய்கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.
1994ல் வியட்நாம் காலனியும், 1990ல் நடிகன் படமும் செம மாஸ் காமெடி. வியட்நாம் காலனி படத்தில் பிரபு, கவுண்டமணி, வினிதா உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தானபாரதி இயக்கியுள்ளார். அதே போல் நடிகன் படத்தில் சத்யராஜ், குஷ்பு, கவுண்டமணி, மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சின்னி ஜெயந்த், பாண்டு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்கியவர் பி.வாசு.
1990ல் கமல் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படம். இதில் கமல், குஷ்பூ, ஊர்வசி, மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் கமல் முற்றிலும் மாறுபட்ட 4 வேடங்களில் நடித்து காமெடியில் கலக்கியிருப்பார். படத்திற்கு கிரேசி மோகன் வசனம் எழுதியுள்ளார். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியுள்ளார். இப்போது பார்த்தாலும் காமெடி பட்டாசு தான்.