இன்று மதுரை முழுவதும் என்னுடைய பாடல் ஒலிக்கிறது… அது எனக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம்… தேவா எமோஷனல்…

By Meena

Published:

தேனிசை தென்றல் என்ற புனைபெயரைக் கொண்ட இசையமைப்பாளர் தேவா வேலூர் மாவட்டத்தில் உள்ள மாங்காட்டில் பிறந்தவர். 1989 ஆம் ஆண்டு ‘மனசுக்கேத்த மகராசா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1990 ஆம் ஆண்டு ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார்.

தனது இரண்டாவது படமான ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் மூலமாக பிரபலமாகி தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் என்ற விருதையும் பெற்றார் தேவா. 25 வருடங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர்.

‘கானா’ பாடல்கள் என்றாலே நம் நினைவிற்கு வருவது தேவா அவர்கள் தான். ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, விஜயின் ‘ மின்சார கண்ணா’, ‘நினைத்தேன் வந்தாய்’, அஜித்தின் ‘காதல் கோட்டை’, ‘முகவரி’, பிரஷாந்த் நடித்து ஹிட்டான ‘கண்ணெதிரே தோன்றினாள்’ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. இவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா அவர்களும் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மதுரையில் சித்திரை திருவிழா அமோகமாக நடைபெற்று வருகிறது. அந்த திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் பிரசித்தி பெற்றது. எல்லா திசையிலிருந்தும் மக்கள் அந்த கண்கொள்ளா காட்சியை காண வருவார்கள். அப்போது ‘வாராரு வாராரு அழகர் வாராரு’ என்ற பாடல் ஒலிக்கப்படும். திருவிழா முடியும் வரையில் அந்த பாடல் எல்லா பக்கமும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அந்தப் பாட்டை உருவாக்கியவர் தேவா அவர்கள் தான். 1999 அம ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடித்து வெளியான ‘கள்ளழகர்’ திரைப்படத்திற்காக உருவாக்கிய பாடல் தான் அது. இதைப் பற்றி எமோஷனலாக பேசியுள்ளார் தேவா. அவர் கூறியது என்னவென்றால், நான் இசையமைத்து தயாரித்த பாடல் இன்று மதுரை முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இது என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் என்று பகிர்ந்துள்ளார் தேவா.

Tags: தேவா