கமல்ஹாசனின் மிகப்பெரிய ப்ராஜக்ட் மருதநாயகம் இந்த படத்துக்கு இன்றோடு பூஜை போட்டு 22 வருடமாக ஆகி விட்டதாம். கடந்த 1997ம் ஆண்டில் இதே நாளான 16 அக்டோபரில் இப்படத்தின் பூஜை இங்கிலாந்து ராணியை வைத்து தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்பட பூஜையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல், சிவாஜி கணேசன் அவர்களின் மனைவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மிகப்பெரும் பொருட்செலவில் இப்படம் தயாரிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு பட்ஜெட் இவ்வளவுதான் என குறிப்பிட முடியாதபடி இப்படத்தை ஆரம்பித்தாலே பட்ஜெட் கட்டுப்படுத்த முடியாத அளவு எகிறி விடும் என்பதே ஆரம்ப காலத்தில் இருந்தே கமலின் பேச்சாக உள்ளது.
ஒரு வழியாக ஆரம்பிக்கப்பட்ட இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். ஒரு பாடலும் ரிக்கார்டிங் செய்யப்பட்டது பொறந்தது பனையூரு மண்ணு என்ற பாடல்தான் அது.
இராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் வாழ்ந்து மறைந்த ஒரு வீரன் தான் மருதநாயகம் என்ற கான்சாகிப் இவரின் வரலாறே படமாக எடுக்கப்பட இருந்தது.
படத்தின் பூஜை தொடங்கிய பிறகு காரைக்குடி பகுதிகளில் சில காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு அத்தோடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இன்று வரை இப்படத்தினை ஆரம்பிப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.