ரஜினியின் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துவருகிறது. படம் ரிலீஸ் ஆகி மூன்றாவது நாளான இன்று ஃபேமிலி ஆடியன்ஸ்களும் படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். அதனால் ஜெயிலர் படத்துக்கு கிடைத்த வரவேற்பு வேட்டையன் திரைப்படத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முதல் நாள் வசூல் இரண்டாம் நாள் வசூல் என ஆளாளுக்கு ஒன்று சொல்லி வருகிறார்கள்.
எது எப்படியோ விடுமுறை நாளான இந்த மூன்று நாள்களுமே வசூல் வேட்டையை வேட்டையன் அள்ளுவார் என்றே தெரிகிறது. தச ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மனசிலாயோ பாடல் பட்டி தொட்டியெங்கும் கொண்டாடி வருகிறார்கள்.
ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்தப் பாடலுக்கு ரிலீஸ்களை போட்டு கொண்டாடி வருகிறார்கள். அந்தளவுக்கு ஐகானிக் ஸ்டெப்பாக மாறியிருக்கிறது. பெரும்பாலும் ரஜினியின் படங்களில் ரஜினிக்கு ஓப்பனிங் சாங் பாடுபவர் பாலசுப்பிரமணியனாக இருப்பார். இல்லை மலேசியா வாசுதேவனாக இருப்பார்.
அதனால் இந்தப் படத்தில் மலேசியா வாசுதேவன் குரல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஐடியாவை சொன்னது ரஜினிதானாம். மனசிலாயோ பாடலில் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்த சொல்லியிருக்கிறார் ரஜினி. இதை ஒரு பேட்டியில் அனிருத்தே சொல்லியிருக்கிறார்.
ரஜினி சொன்னதை போலவே மனசிலாயோ பாடல் மிகப்பெரிய ரீச்சை அடைந்திருக்கிறது. இத்தனை வருடங்கள் கடந்தும் மலேசியா வாசுதேவனின் குரல் இன்னும் பிரபலமாகி வருகிறது என்றால் ஒரு விதத்தில் ரஜினியும் காரணம் என்று தெரிகிறது.