சீர்காழி வேணாம்… டிஎம்எஸ்தான் வேணும்… அடம்பிடித்த சிவாஜி.. அட அது சூப்பர் பாடலாச்சே!

சிவாஜி கணேசன் குரலையும், டிஎம்எஸ் குரலையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஏதோ டிஎம்எஸ் பாடும்போது சிவாஜியே பாடியது மாதிரி இருக்கும். ஆனால் அவர் வாயை மட்டும்தான் அசைப்பார். அதே மாதிரி டிஎம்எஸ் ஒரு…

சிவாஜி கணேசன் குரலையும், டிஎம்எஸ் குரலையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஏதோ டிஎம்எஸ் பாடும்போது சிவாஜியே பாடியது மாதிரி இருக்கும். ஆனால் அவர் வாயை மட்டும்தான் அசைப்பார். அதே மாதிரி டிஎம்எஸ் ஒரு பாட்டைப் பாடினாருன்னா சிவாஜி பாடியது மாதிரியே இருக்கும்.

அந்த வகையில் அவர்களது குரல் ஒத்துப் போச்சு. அப்படி ஒரு சமயத்தில்தான் குங்குமம் படத்துக்காக சீர்காழியை வைத்து சிவாஜிக்கு ஒரு பாடலைப் பதிவு செய்தார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர். அதுதான் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடல். அது சீர்காழி பாடினதுன்னு தெரிந்ததும் சிவாஜி, தயாரிப்பாளரை அழைத்து என்னுடைய பாடலை டிஎம்எஸ் பாடினா தான் நல்லாருக்கும். அதனால தயவுசெய்து டிஎம்எஸ்சை அழைத்துப் பாடச் சொல்லி மீண்டும் பதிவு செய்யுங்கன்னு சொன்னார்.

அந்தப் பாடலின் மெட்டையும், ராகத்தையும் நீங்க கேட்கல. அதனாலதான் அப்படி சொல்றீங்க. இது இந்துஸ்தானி இசையில அமைந்த பாடல். அதனால சீர்காழி கோவிந்தரராஜன் அந்தப் பாடலைப் பாடினா நல்லாருக்கும்னு கேவி.மகாதேவன் நினைத்துள்ளார். அதனால்தான் அந்தப் பாடலைப் பதிவு செய்துள்ளார். ஒருமுறை நீங்க அந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கன்னும் தயாரிப்பாளர் எவ்வளவோ சொன்னார். .

ஆனால் சிவாஜி அதைக் கேட்கவில்லை. நிச்சயமா சீர்காழி பாடினால் அந்தப் பாடல் எடுபடாது என்பது சிவாஜியின் எண்ணமாக இருந்தது. அதன்காரணமாகத் தான் அவர் பிடிவாதமாக இருந்தார். படத்தோட கதாநாயகன் சிவாஜி அப்படி சொல்லும்போது தயாரிப்பாளர் இப்படி சொல்லும்போது தயாரிப்பாளரால் என்ன செய்ய முடியும்?

அதனால்தான் டிஎம்எஸ்சை வரவழைத்து இப்போது கேட்கும் பாடலைப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் நடந்து சில நாள்களில் ஒரு திருமண விழாவில் சிவாஜியை சந்தித்த சீர்காழி தன்னோட மனக்குமுறலை அடக்க முடியாமல், அண்ணே மத்தவங்களுக்கு சாப்பாடு போடுங்க. நான் வேண்டாம்னு சொல்லல. ஆனா எச்ச இலையில போடாதீங்கன்னு தன்னோட ஆத்திரத்தை சொன்னார்.

சிவாஜி அந்த நேரத்துல தமிழ்சினிமா உலகின் உச்சத்தில் இருந்தார். சீர்காழி அப்படி ஆத்திரத்தில் பேசியபோது சிவாஜி ஆத்திரமோ, கோபமோ கொள்ளவில்லை. அந்த ஆத்திரம் நியாயமானது என்பதை உணர்ந்து கொண்டு அமைதியாக இருந்தார். அதனால்தான் அந்த சம்பவத்தால் சீர்காழி, சிவாஜி நட்பு துளியும் பாதிக்கப்படாமல் இருந்தது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.