சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் ஒரு புகழ்பெற்ற வசனம் இடம் பெற்றது
நீ யாரா வேணும்னா இரு
எவனா வேணும்னா இரு ; ஆனா
என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு
இந்த வசனம் அனைவரையும் கவர்ந்த நிலையில் தற்போது இந்த வசனத்தை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் தனது டுவிட்டரில் பதிவு செய்து இந்த வசனத்தில் கூறியபடியே அனைவரும் பின்பற்றுங்கள் என்று கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த சிவகார்த்திகேயன் கலெக்டருக்கு நன்றி கூறியதோடு இந்த வசனத்தை எழுதியவர் இயக்குனர் பொன்ராம் அவர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்