தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுப்பாளினி பாவனாவும், மிர்ச்சி விஜய்யும் தொகுத்து வழங்கினார்கள் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டாகும் என்றும், ஏனெனில் இதற்கு முன்னர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் இசை வெளியீட்டு விழாவை பாவனா தான் தொகுத்து வழங்கினார் என்றும் அதனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாகவும் அதேபோல் சென்டிமென்டாக துப்பாக்கி படம் போலவே எனக்கும் மிகப் பெரிய ஹிட்டாகும் என்று நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார்
இது குறித்து கருத்து தெரிவித்த அவர் ’நடந்தா நல்லா இருக்கும்’ என்று கூறியுள்ளார். பாவனாவின் இந்த டுவீட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது