ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமும், திரையுலக ரசிகர்களும் சமீப வருடங்களில் மிகப்பெரிய மோதலுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ‘துணிவு’ படத்தை எச்.வினோத் இயக்குகிறார், போனி கபூர் தயாரித்துள்ளார், ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மறுபுறம் தில் ராஜு தயாரித்த ‘வாரிசு’ படத்தை வம்ஷி இயக்க, தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய ஜோடியாக நடித்துள்ளனர்.2023 பொங்கல் அன்று அஜீத் குமாரின் ‘துணிவு’ மற்றும் தளபதி விஜய்யின் ‘வாரிசு’ ஆகியவை உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மோத தயார்ப்படுத்தி கொண்டிருக்கிறது. இவற்றின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், இரண்டு படங்களும் ஜனவரி 12, வியாழன் அன்று திரைக்கு வரும் என்பது ஏறக்குறைய உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய திரையரங்குகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இருபெரும் படங்களின் முதல் நாள் முதல் காட்சிகளை முன்கூட்டியே திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனவரி 12 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு ‘துணிவு’ முதல் காட்சியும், அதிகாலை 5 மணிக்கு ‘வாரிசு’ திட்டமிடப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஜித் மற்றும் தளபதி ரசிகர்கள் எந்தவிதமான மோதலிலும் ஈடுபடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்க மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி முதல் சில நாட்களில் படத்தின் காட்சிகள் கூட அப்படித்தான் திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது.