கமல், மணிரத்னம் காம்போவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தக் லைஃப் வெளியாக உள்ளது. படத்தில் சிம்புவும் இணைந்திருப்பது கூடுதல் சிறப்பு. படத்தை கமலும், மணிரத்னமும் இணைந்து நாயகனுக்குப் பிறகு வருவதால் ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார்கள்.
படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முழுமையாக முடிவடைந்தது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாகத் தெரிகிறது. 21 வருடங்களுக்குப் பிறகு அதாவது விருமான்டி படத்துக்கு அப்புறமாக கமலுக்கு ஜோடியாக அபிராமி நடிக்கிறார்.
படத்தில் திரிஷாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அசோக் செல்வம், சன்யா மல்ஹோத்ரா உள்பட பலரும் நடிக்கின்றனர். கமலுக்கு இணையான ரோலில் சிம்பு கலக்குகிறாராம். படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அடுத்த வாரம் வெளியாகிறது. இந்தப் பாடலை கமலே எழுதியுள்ளாராம். இனி படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவரும் என்று தெரிகிறது. படத்தின் புரொமோஷன்களுக்காக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் இருக்குமாம். அமெரிக்காவுக்கும் செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம்.
விக்ரம் படம் மாஸ் ஹிட். அதன்பிறகு கமலுக்கு சொந்தத் தயாரிப்பில் அமரன் படம் வந்தது. அதுவும் மெகா ஹிட். அடுத்து வருவது தக் லைஃப் .இதுவும் வெற்றிக் கூட்டணி என்பதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. அதே போல் கமல், சிம்பு இணைவது இதுதான் முதல் முறை. அதனால் இருதரப்பு ரசிகர்களுக்கும் ஆவல் அதிகரித்துள்ளது. இதனாலும் படத்திற்கு இருமடங்கு வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வரும் ஜூன் 5ல் திரைக்கு வருகிறது.